கள் இறக்க போராட்டம் பா.ஜ., கட்சி முழு ஆதரவு| Dinamalar

கள் இறக்க போராட்டம் பா.ஜ., கட்சி முழு ஆதரவு

Added : ஜன 21, 2022 | |
கோவை:தமிழகம் முழுவதும் கள் இயக்கம் நடத்தும் போராட்டத்துக்கு, பா.ஜ., முழு ஆதரவை வழங்கும்,'' என, கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் நாகராஜ் கூறினார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தீங்கு விளைவிக்கும் மது விற்பனை, தமிழக அரசுக்கு நிரந்தர தொழிலாக மாறிவிட்டது. ஆனால் கள் இறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. உணவாக இருக்கும் கள்ளை இறக்கி விற்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரமும்,

கோவை:தமிழகம் முழுவதும் கள் இயக்கம் நடத்தும் போராட்டத்துக்கு, பா.ஜ., முழு ஆதரவை வழங்கும்,'' என, கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் நாகராஜ் கூறினார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தீங்கு விளைவிக்கும் மது விற்பனை, தமிழக அரசுக்கு நிரந்தர தொழிலாக மாறிவிட்டது. ஆனால் கள் இறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. உணவாக இருக்கும் கள்ளை இறக்கி விற்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் அதிகரிக்கும் என, பா.ஜ., கருதுகிறது. தமிழக விவசாயிகள் நலன் கருதி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் படி, தமிழகம் முழுவதும் கள் இயக்கம் சார்பில் நடக்கும் போராட்டத்துக்கு, பா.ஜ., முழு ஆதரவு தெரிவிக்கிறது. போராட்டங்களில் பங்கேற்க இருக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X