கடலுார்-கடலுார் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 447 வார்டுகளில் 231 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலுார் மேயர், நகராட்சி சேர்மன் 1, பேரூராட்சி சேர்மன் 3 பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் இருந்தன. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், வார்டுகள் மறு வரையறை செய்து, எந்தெந்த பிரிவினருக்கு எத்தனை வார்டுகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், நகராட்சியாக இருந்த கடலுார் மாநகராட்சியாகவும், பேரூராட்சிகளாக இருந்த வடலுார், திட்டக்குடி, நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில், கடலுார் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வடலுார், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை உட்பட 14 பேரூராட்சிகள் உள்ளன.பொது பிரிவுக்கு ஒதுக்கீடுஇந்நிலையில், மேயர், சேர்மன் பதவிகள், எந்தெந்த பிரிவினருக்கு எத்தனை வார்டுகள் என மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. கடலுார் மாநகராட்சி மேயர் பதவி பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி பெண்கள் பொது, திட்டக்குடி நகராட்சி சேர்மன் பதவி எஸ்.சி., பொது, பரங்கிப் பேட்டை, பெண்ணாடம், லால்பேட்டை பேரூராட்சி சேர்மன் பதவிகள் பெண்கள் பொது, கிள்ளை பேரூராட்சி சேர்மன் பதவி எஸ்.டி., பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பெண்கள் அதிக வார்டுகள்மேலும், கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 23, நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30ல் 15, பண்ருட்டி நகராட்சியில் 33ல் 17, சிதம்பரம் நகராட்சியில் 33ல் 17, விருத்தாசலம் நகராட்சி 33ல் 17 வார்டுகள், வடலுார் நகராட்சி 27ல் 14, திட்டக்குடி நகராட்சியில் 24ல் 12 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் 15ல் 8, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி 18ல் 9, பரங்கிப்பேட்டை பேரூராட்சி 18ல் 9, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 18ல் 9, புவனகிரி பேரூராட்சி 18ல் 9, கங்கைகொண்டான் பேரூராட்சி 15ல் 8, பெண்ணாடம் பேரூராட்சி 15ல் 8, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி 15ல் 8, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி 15ல் 8, லால்பேட்டை பேரூராட்சி 15ல் 8, மங்கலம்பேட்டை பேரூராட்சி 15ல் 8, தொரப்பாடி பேரூராட்சி 15ல் 8, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி 15ல் 8, கிள்ளை பேரூராட்சி 15ல் 8 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கடலுார் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 447 வார்டுகளில் 231 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இது 52 சதவீதம் ஆகும்.மீதமுள்ள 216 வார்டுகளில் கடலுாரில் 3 வார்டுகள், நெல்லிக்குப்பம் 5, பண்ருட்டி 2, சிதம்பரம் 1, விருத்தாசலம் 3, வடலுார் 2, திட்டக்குடி 3, அண்ணாமலை நகர் 1, காட்டுமன்னார்கோவில் 2, பரங்கிப்பேட்டை 1, குறிஞ்சிப்பாடி 1.புவனகிரி 2, பெண்ணாடம் 2, ஸ்ரீமுஷ்ணம் 1, சேத்தியாத்தோப்பு 1, மங்கலம்பேட்டை 1, தொரப்பாடி 1, கிள்ளை 1 என, எஸ்.சி., பொதுப் பிரிவில் 33 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 183 வார்டுகள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE