சென்னை : 'பெண்களை தரக்குறைவாக சித்தரிக்கும் பதர்களை துாக்கிலிட்டால் கூட தவறில்லை' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:'கிளப் ஹவுஸ்' என்ற 'மொபைல் ஆப்' செயலியில் நடந்த உரையாடலில், முஸ்லிம் பெண்கள் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை, சிலர் செய்துள்ளனர். இதை யார் செய்திருந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.கடந்த மாதம், 'சல்லி வீல்ஸ், புல்லிபாய்' மொபைல் ஆப்களில், முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு, அவர்கள் விற்பனைக்கு என்று ஏலம் நடத்தி, அவதுாறு செய்திருப்பது அநாகரிக செயல்.
காவல் துறை இந்த குற்ற செயலில் ஈடுபட்டோரை கைது செய்திருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தை வைத்து, இந்த குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த ஒரே வழி, சட்டங்களை கடுமையாக்க வேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
பெண்களை இழிவுப்படுத்தி, தரக்குறைவாகப் பேசும், இதுபோன்ற பதர்களை, துாக்கிலிட்டால் கூட தவறில்லை. அப்போதுதான் இதுபோன்ற தரக்குறைவான குற்றச் செயலில் ஈடுபட, மற்றவர்கள் துணிய மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE