காஞ்சிபுரம்-காஞ்சிபுரம், பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு, 33; பிரபல ரவுடி. இவர் மீது, 11 கொலை, 23 கொலை மிரட்டல்கள் உட்பட, 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன.காஞ்சிபுரத்தில் இருந்து வெளியேறி, தலைமறைவாக இருந்து, வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தார். ரவுடிகளை கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தியாகுவை பிடிக்க, எஸ்.பி., சுதாகர் தனி கவனம் செலுத்தினார். அதற்காக அமைக்கப்பட்ட மாவட்ட தனிப்படை போலீசார், டில்லியில் பதுங்கியிருந்த தியாகுவை நேற்று கைது செய்தனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கூறியதாவது:ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. தியாகு, 2020ல் குண்டாசில் இருந்து வெளியில் வந்து, தலைமறைவானார். இதுவரை ஆறு முறை குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளார்.டில்லி அருகில் தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க, ஏ.டி.எஸ்.பி., வெள்ளத்துரை மற்றும் ஆய்வாளர் சுந்தராஜன், உதவி ஆய்வாளர்கள் சிவகுமார், முரளி, வினோத் ஆகியோர், ஹரியானா மாநிலம் சென்று தேடினர். டில்லி அருகில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE