'டிராவல் கார்டு' விற்பனை 'மெட்ரோ' ஊழியர்கள் புலம்பல்

Added : ஜன 21, 2022 | |
Advertisement
சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்ட்ரல் மெட்ரோ நிலையங்கள் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில், தினமும், 1 லட்சத்துக்குமேல் பயணியர் பயணம் செய்கின்றனர்.ரயில்களில் பயணியர் வருகையை அதிகரிக்க, டிராவல் கார்டு மற்றும் மொபைலில் 'கியூ ஆர்' குறியீடு வாயிலாக டிக்கெட் எடுக்கும் பயணியருக்கு, 20 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.மேலும் பயணியர் வருகையை

சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்ட்ரல் மெட்ரோ நிலையங்கள் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில், தினமும், 1 லட்சத்துக்குமேல் பயணியர் பயணம் செய்கின்றனர்.

ரயில்களில் பயணியர் வருகையை அதிகரிக்க, டிராவல் கார்டு மற்றும் மொபைலில் 'கியூ ஆர்' குறியீடு வாயிலாக டிக்கெட் எடுக்கும் பயணியருக்கு, 20 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.மேலும் பயணியர் வருகையை அதிகரிக்க, கடைகளிலும், தனியார் ஏஜன்ட் வாயிலாக, டிராவல்கார்டு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடைக்காரர்கள் ஒரு டிராவல் கார்டு விற்றால் 5 ரூபாய் கமிஷன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்துடன், மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் அருகில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், மெட்ரோ ரயிலின் சிறப்புகளை சொல்லி, பயணம் செய்வதற்கு ஆர்வத்தை துாண்டும் வகையில், நேரடியாக டிராவல் கார்டு விற்கவும், ரயில் நிலைய வணிகப்பிரிவு ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.இதையொட்டி, நிலையத்திற்கு அருகே முக்கிய சாலைகளில் பொது மக்கள் கூடும் இடங்களில், ஊழியர்களால் டிராவல் கார்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும், ஐந்து டிராவல் கார்டு விற்பனை செய்வதே சிரமமாக உள்ளது என, ஊழியர்கள் புலம்புகின்றனர்

ரத்து செய்ய வலியுறுத்தல்:பயணியர் கவுன்டரில் டிராவல் கார்டு வாங்கும் வசதி உள்ளதால், ஊழியர்கள் வெளியே செல்வதால், உழைப்பும் பயனற்று போகிறது; பலனும் இல்லை.கொரோனா பரவல் அதிகம் உள்ள நேரத்தில், வெளியிடங்களில், டிராவல் கார்டு விற்பனை செய்வதற்கான நிர்வாகத்தின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, ஊழியர்களின் சார்பில், மெட்ரோ நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X