ரூ.1.27 கோடியில் நவீன வணிக வளாகம் அனகாபுத்துார் வியாபாரிகளுக்காக ஏற்பாடு

Added : ஜன 21, 2022 | |
Advertisement
அனகாபுத்துார்--தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்துாரில், வியாபாரிகளின் வசதிக்காக 1.27 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்துார், பஜார் தெருவில், தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு, மீன் மற்றும் இறைச்சி என, 50 கடைகள் உள்ளன.அனகாபுத்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தோர்,

அனகாபுத்துார்--தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்துாரில், வியாபாரிகளின் வசதிக்காக 1.27 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்துார், பஜார் தெருவில், தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு, மீன் மற்றும் இறைச்சி என, 50 கடைகள் உள்ளன.அனகாபுத்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தோர், இந்த மார்க்கெட்டிற்கு வந்து, மீன் மற்றும் இறைச்சி வாங்கி செல்கின்றனர்.இந்த நிலையில், இந்த கட்டடம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை என்பதால், வலுவிழந்து காணப்படுகிறது.அதனால், பழைய கட்டடத்தை இடித்து, மீன், இறைச்சி மற்றும் காய்கறி வியாபாரிகளின் வசதிக்காக, வாகன நிறுத்தம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதியுடன் கூடிய, நவீன வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.27 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள, இந்த வணிக வளாகத்தில், 50 கடைகள் அமையும். இப்பணி, ஓரிரு வாரங்களில் துவங்கும் என்று தெரிகிறது. இப்பணி முடிந்தால், கடைகளை மூன்றாக பிரித்து, மீன், இறைச்சி, காய்கறி வியாபாரிகளுக்கு பிரித்து வழங்கப்படும்.இதன்மூலம், பஜார் தெருவில், தற்போது காய்கறி கடைகளால் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் குறையும். அதேநேரத்தில், வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில், வணிக வளாகம் கட்டப்படவுள்ள இடத்தை, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், நேற்று காலை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X