சிட்லபாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அளவீடு

Added : ஜன 21, 2022 | |
Advertisement
தாம்பரம்,--குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கத்தில், பெரிய ஏரி உள்ளது. ஏரியின் கரையில் உள்ள, கிராம நத்தம் நிலங்களை, ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக, சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, ஏரியில் உள்ள, 450 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக, சமீபத்தில், வருவாய்த் துறை நோட்டீஸ்

தாம்பரம்,--குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கத்தில், பெரிய ஏரி உள்ளது. ஏரியின் கரையில் உள்ள, கிராம நத்தம் நிலங்களை, ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக, சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, ஏரியில் உள்ள, 450 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக, சமீபத்தில், வருவாய்த் துறை நோட்டீஸ் வழங்கியது.தொடர்ந்து, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், அறிவுடைநம்பி தலைமையில், வருவாய் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணிகளில் நேற்று காலை ஈடுபட்டனர்.இதற்காக, தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். வருவாய் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அளவிட துவங்கியதும், பட்டா நிலங்களை அளக்ககூடாது எனக்கூறி, அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை எச்சரித்தனர். அதை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து, குறியீடு செய்யும் பணிகள் நடந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X