மகிழ்ச்சி! திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் திருமண மண்டபம் தங்கும் விடுதி ஓய்வு கூடம் முடிக்கப்பட்டு தயார் நிலை

Added : ஜன 21, 2022 | |
Advertisement
திருப்போரூர்-திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 3 கோடி ரூபாயில் திருமண மண்டபம், தங்கும் விடுதி, ஓய்வு கூடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணிகள் முடிந்ததால், திறப்பு விழா எப்போது என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு
 மகிழ்ச்சி! திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் திருமண மண்டபம் தங்கும் விடுதி ஓய்வு கூடம் முடிக்கப்பட்டு தயார் நிலை

திருப்போரூர்-திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 3 கோடி ரூபாயில் திருமண மண்டபம், தங்கும் விடுதி, ஓய்வு கூடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணிகள் முடிந்ததால், திறப்பு விழா எப்போது என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். முடிக்காணிக்கை, பிரசாதக் கடை, வாகன நிறுத்தம், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்துதல், மொட்டை அடித்தல் என, பல கட்டணங்கள் வாயிலாக கோவிலுக்கு ஆண்டுதோறும் 4 கோடி ரூபாயில் வருவாய் கிடைக்கிறது.ஆனாலும், கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் இருந்தது.தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, இரவு தங்குகின்றனர். முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. தங்குவோருக்கு தங்கும் விடுதிகள், திருமணம் நடத்த மண்படங்கள் இல்லாமல் இருந்தது.எனவே, பக்தர்கள் தங்குவதற்கும், திருமணம் நடத்துவதற்கும் கோவில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதி, திருமண மண்டபம், ஓய்வு அறை கட்டித்தர வேண்டும் என, பல ஆண்டுகளாக அறநிலையத் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து ஹிந்து அறநிலையத் துறை சார்பில் 2014ல் கோவில் அருகே திருப்போரூர் - நெம்மேலி சாலையில், தன்னிறைவு திட்டம் மற்றும் கோவில் நிதி 2 கோடி ரூபாயில் திருமண மண்டபம், ஓய்வு விடுதி, ஓய்வுக்கூட வளாகம் ஆகியவை கட்ட திட்டமிட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கின.

2016ல், 90 சதவீதம் பணிகள் முடிந்தன. விடுபட்ட அடிப்படை பணிகள் முடிக்காமல் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், கந்தசுவாமி கோவிலில் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.அப்போது, பக்தர்களுக்கான கட்டடங்கள் மூடி கிடப்பதை பார்த்து கேட்டறிந்தனர். உடனே, விடுபட்ட அனைத்து பணிகளையும் முடித்து 3 மாதங்களில் திறக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.தொடர்ந்து 4 கோடி ரூபாயில் திருமண மண்டபத்திற்கான புதிய கழிப்பறை கட்டுதல், சமையல் அறை விரிவுபடுத்தல், 'பார்க்கிங்' தரையை மேம்படுத்தல், அனைத்து கட்டடங்களையும் துாயமைப்படுத்தி வண்ணம் அடித்தல் போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளன.இதுகுறித்து கோவில் செயல்அலுவலர் சக்திவேல் கூறுகையில், ''அமைச்சர் ஆய்விற்குபின், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக முடிக்கப்பட்டுள்ளன. விரைவில், பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் திறப்பு விழா நடத்தப்படும்,'' என்றார்.

சில பணிகள் முடிக்காததால் மண்டபம், தங்கும் விடுதி, ஓய்வு கூடம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அமைச்சர் ஆய்வு செய்து, விடுபட்ட பணிகள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது பணிகள் முடிக்கப்பட்டு தயாராக உள்ளது. இதனால் பக்தர்கள் பயன்பெறுவர். எனினும் காலம் தாழ்த்தாமல், பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பக்தர்கள், திருப்போரூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X