பிபின் ராவத் ஐம்பொன் சிலை; குடந்தையில் வடிவமைப்பு

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (5)
Advertisement
தஞ்சாவூர் : குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை, குடந்தையில் தயாராகி வருகிறது.நீலகிரி மாவட்டம், குன்னுாரில், கடந்த டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் 'ஷைன் இந்தியன்
பிபின் ராவத், ஐம்பொன் சிலை

தஞ்சாவூர் : குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை, குடந்தையில் தயாராகி வருகிறது.



நீலகிரி மாவட்டம், குன்னுாரில், கடந்த டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் 'ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோஷியல் வெல்பேர் பவுண்டேஷன்' சார்பில், 120 கிலோ எடையில், அவரது மார்பளவு ஐம்பொன் சிலையை, டில்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்தனர்.

கும்பகோணம், நாகேஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சிற்பக் கூடத்தில் சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, களிமண்ணில் அவரது உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அடுத்து, ஐம்பொன்னில் பிபின் ராவத் சிலைக்கு முழு உருவம் கொடுக்கும் பணி நடக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
22-ஜன-202209:57:49 IST Report Abuse
Tamilan //////
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
21-ஜன-202211:31:56 IST Report Abuse
raja கும்பகோணத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயம் இது....
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
21-ஜன-202210:50:34 IST Report Abuse
Ramesh Sargam என்ன இருந்தாலும் தமிழ் மக்கள், மேன் மக்களே. இதே விபத்து வேறு எந்த ஊரிலாவது ஏட்பட்டிருந்தால், இந்த நேரத்திற்கு அந்த விபத்தையே மறந்து போயிருப்பார்கள் அந்த ஊர் மக்கள். ஆனால், தமிழ் மக்கள், அந்த விபத்தில் அகால மரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களை இன்றும் மறவாமல், அவருக்கு என்று ஒரு சிலை செய்து அதை தலைநகரில் வைக்க துடிக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் தமிழ் மக்கள் தமிழ் மக்களே. வாழ்க தமிழ் மக்கள். வாழ்க தமிழகம். வாழ்க நமது ராணுவ வீரர்கள். வாழ்க நமது இந்திய நாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X