சிகந்தூர் - துமரி இடையே, சராவதி ஆற்றின் மேல் கட்டப்படும் மேம்பால பணிகள் நிறைவேறுமா

Added : ஜன 21, 2022 | |
Advertisement
ஷிவமொகா-சிகந்துார் - துமரி இடையே, சராவதி ஆற்றின் மேல் கட்டப்படும் மேம்பால பணிகள் தாமதமாகி வருவதால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஷிவமொகா மாவட்டம், சாகர் தாலுகாவின் சிகந்துார் - துமரி செல்ல சராவதி ஆற்றில் படகு வாயிலாக தான், 2.50 கி.மீ., பயணிக்க வேண்டிஉள்ளது.முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டம் என்பதால் மேம்பாலம்

ஷிவமொகா-சிகந்துார் - துமரி இடையே, சராவதி ஆற்றின் மேல் கட்டப்படும் மேம்பால பணிகள் தாமதமாகி வருவதால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஷிவமொகா மாவட்டம், சாகர் தாலுகாவின் சிகந்துார் - துமரி செல்ல சராவதி ஆற்றில் படகு வாயிலாக தான், 2.50 கி.மீ., பயணிக்க வேண்டிஉள்ளது.முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டம் என்பதால் மேம்பாலம் அமைப்பதற்காக, பலமுறை மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து எடியூரப்பா முறையிட்டார்.அதன் பலனாக 2018, பிப்ரவரி 19ல் மத்திய அமைச்சரே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிறுவனம் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது.மொத்தம் 2.50 கி.மீ., நீளம், 16 மீட்டர் அகலம், 55 மீட்டர் உயரம், 17 துாண்கள் கொண்ட மேம்பாலம் அமைய உள்ளது. தற்போதைக்கு 35 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2023க்குள் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வட கிழக்கு பருவ மழையால், ஆற்றில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக பாய்ந்தோடுவதால் பணிகளுக்கு இடையூறுஏற்படுகிறது.இந்நிலையில், சராவதி அணையில் தண்ணீர் வெளியேற்றுவதை வெகுவாக குறைக்கும்படி தேசிய நெடுஞ்சாலை துறை கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, சராவதி அணை தலைமை பொறியாளர் மகேஷ் கூறுகையில், ''திடீரென அதிகபட்ச தண்ணீரை சேமிக்க முடியாது. மின்சாரம் உற்பத்திக்கும் வாய்ப்பில்லை. எனவே அரசின் ஆலோசனை கேட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X