கேரளாவில் மொபைல் போன் உதவியுடன் திருட்டை தடுத்த பெண்

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (11)
Advertisement
கோட்டயம்: கேரளாவில் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த திருடனை, மொபைல் போனில் உள்ள வசதியை பயன்படுத்தி, போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.கேரளாவில் மாநிலம் கன்னுார் மாவட்டம் பாலா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயதான பெற்றோர், கோட்டயம் மாவட்டம் கீழுரில் வசிக்கின்றனர். இவர்களது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில்
Kerala Woman, Theft, CCTV Footage

கோட்டயம்: கேரளாவில் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த திருடனை, மொபைல் போனில் உள்ள வசதியை பயன்படுத்தி, போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.

கேரளாவில் மாநிலம் கன்னுார் மாவட்டம் பாலா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயதான பெற்றோர், கோட்டயம் மாவட்டம் கீழுரில் வசிக்கின்றனர். இவர்களது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை தன் மொபைல் போனில் பார்க்கும் தொழில்நுட்பத்தை அந்தப் பெண் இணைத்துள்ளார்.


latest tamil news


நேற்று முன்தினம் இரவு தன் பெற்றோரின் வீட்டு மாடிப்படியில் மர்ம நபர் ஒருவர் ஏறிச் செல்வதை மொபைலில் இணைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த மகள் அதிர்ச்சியடைந்தார். இது பற்றி பெற்றோர் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவரை மொபைலில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் வருவதைப் பார்த்த திருடன் மாடியில் இருந்து குதித்து தப்பியோடினார். போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். வயதானவர்கள் தனியாக இருப்பதை அறிந்து வீட்டு கதவை உடைத்து திருட அந்த நபர் முயற்சித்தது விசாரணையில் தெரிந்தது. சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜன-202211:13:47 IST Report Abuse
ஆரூர் ரங் இதில் 2 ஜோக் ஒன்று. திருடன் நைட்டி போட்டுக் கொண்டு திருடவந்தது. இன்னொன்று திருடத் துவங்கும் முன்பு மாடிப் படிகளை தொட்டுக் கும்பிட்டது .🤑 இனிமே தொழிலை சரியா செய்யணும் ன்னா தீய முக விஞ்ஞான ஊழல் வகுப்புக்கு போ 😛
Rate this:
selva - Chennai,இந்தியா
21-ஜன-202212:40:56 IST Report Abuse
selvaபெட்ரோல் திருடர்..கிட்ட போ.....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜன-202210:35:27 IST Report Abuse
Lion Drsekar இதுபோன்ற வீரப்பெண்மணிகளுக்கு காவல் துறையில் நியமனம் செய்யவேண்டும், மன்னிக்கவும் வேலைக்கு சேருவதற்கு முன்புதான் உடல்தகுதிகள் எல்லாமே வேலைக்கு சேர்ந்த பின்பு நாம்தான் பணியில் இருப்பவர்களை பார்க்கிறோம் சிலரால் நடக்கக்கூட முடியாது சிறு வயதாக இருந்தாலும். இன்றைக்கு தேவை வீரம் இதுதான் மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் . இனி இதுபோன்ற வீர செயல்களில் ஈடுபடுவோருக்கு மக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளில் முன்னுரிமை கொடுத்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
அருணாசலம், சென்னைலயன்! இதில் என்ன வீரச் செயல் இருக்கிறது? புத்திசாலித்தனமாக நடந்து திருட்டை தடுத்திருக்கிறார். என்னவோ போங்க....
Rate this:
Dr.Arun - Madurai,இந்தியா
21-ஜன-202220:35:01 IST Report Abuse
Dr.Arunஅதுதானே, இதில் என்ன வீரம் இருக்கிறது? இது மொபைல் போனில் இந்த மாதிரி வசதி வைத்துள்ளவர்கள் அனைவரும் செய்யும் செயல் தானே? இந்த சம்பவத்தில் அந்த இடத்திற்கு போலீஸ் உடனே சென்று திருடனை பிடித்ததை ஒருவரும் பாராட்டியதாகத் தெரியவில்லை....
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
21-ஜன-202209:53:44 IST Report Abuse
தமிழன் திருடன் நைட்டி போட்ருக்கான். செம காமடி. தவிர இது வீடு மாதிரி தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X