கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை தீவிரம்; மெடிக்கலில் மருந்து வாங்கினாலும் விபரம் அவசியம்!

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (11)
Advertisement
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளிக்கு சிகிச்சை பெறுவோரின் விபரத்தை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது, தாங்களாக மருந்து கேட்டு வருவோரின் விபரங்களையும் சேகரித்து தெரிவிக்க அனைத்து மருந்தகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னைசென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளிக்கு சிகிச்சை பெறுவோரின் விபரத்தை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது, தாங்களாக மருந்து கேட்டு வருவோரின் விபரங்களையும் சேகரித்து தெரிவிக்க அனைத்து மருந்தகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.latest tamil news
சென்னை மாநகராட்சியில், ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி, 8,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த மாதம் முதல், தினசரி பாதிப்பு ஏற்றத்தில் இருந்த நிலையில், சில நாட்களாக 300 என்ற அளவில் பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னை மாநகராட்சியும், தொற்று பரவலை குறைக்கும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, 522 மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளால் சிகிச்சை பெறுவோர், 'சிடி ஸ்கேன்' எடுப்போரின் பெயர், முகவரி, அலைபேசி எண்களை, மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும்படி, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து தனியார் மருத்துவமனைகளும், நோயாளிகளின் விபரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தி வருகிறது.கடந்த 19ம் தேதி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 1,497 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 455 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் வாயிலாக, குறைந்தது, 1,000 பேருக்கு கொரோனா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, மருந்தகங்களில், சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு தாங்களாகவே மருந்து வாங்குவோரின் விபரங்களையும் சேகரித்து தெரிவிக்க, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


latest tamil newsஇதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சல், சளி போன்றவற்றுக்கு சிகிச்சை பெறுவோரை அடையாளம் கண்டு, உரிய நேரத்தில் தொற்று கண்டறியப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில், தினசரி 400 பேருக்காவது தொற்று உறுதி செய்யப்படுகிறது. இவர்களுக்கு உரிய நேரத்தில் தொற்று கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதால், 1,000 முதல் 5,000 பேருக்கு தொற்று பரவுவது தடுக்கப்பட்டு உள்ளது.அதேபோல், மருந்தகங்களில் காய்ச்சல், சளி போன்றவற்றிற்கு மருந்து வாங்குவோரின், மொபைல் போன் எண், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை கேட்டு பெற, அந்தந்த மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது.latest tamil newsஅந்த எண்களை வைத்து, மருந்தகங்களில் மருந்து பெறுவோருக்கும் பரிசோதனை செய்து, கொரோனா தொற்று கண்டறியப்படும். இரண்டாம் அலையின் போது, மருந்தகங்களில், மருந்து பெற்றோர் விபரங்களை சேகரித்து, அவர்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்ததன் வாயிலாக, தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிந்தது.
தற்போதும், அந்த நடைமுறையை பின்பற்றி, தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் முக கவசம் அணிவது, அடிக்கடி கைகளை நன்றாக கழுவுவது, தடுப்பூசி போட்டுக் கொள்வது உள்ளிட்ட அரசின் வழிக்காட்டுதல்களை பின்பற்றி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-202206:47:01 IST Report Abuse
அப்புசாமி கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வாங்குனாலும் ஆதார் கட்டாயம். வர்ர தீவாளிக்கு லேகியம் வாங்குனாலும் ஆதாத், பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பேங்க் அக்கவுண்ட் எல்லாவற்றையும் இணைக்கணுமாம்.
Rate this:
Cancel
S Vaidhinathan - Mannivakkam Chennai 600048,இந்தியா
21-ஜன-202218:15:52 IST Report Abuse
S Vaidhinathan Better everyone who is buying medicine is tested.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஜன-202211:13:31 IST Report Abuse
S.Baliah Seer இது மருந்து எழுதி கொடுத்த பகுதி நேர டாக்டர்கள் ,மாலை நேரங்களில் சிறு சிறு கிளினிக் நடத்தும் டாக்டர்களைக் கட்டுப்படுத்தும். முதன் முதல் கொரோனா வந்தபோது நடத்திய கெடுபிடிகளை மீண்டும் கொண்டுவருவது தவறு. காய்ச்சல் ,சளி என்றாலே கொரோன என்ற மடமையை வளர்க்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X