2 ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வர் ஸ்டாலின்

Updated : ஜன 21, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை: மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில், மதுரையில் ரூ.49.74 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.51.77 கோடி மதிப்பு புதிய திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.பின்னர்
madurai, மதுரை, meenakshiammantemple, மீனாட்சி அம்மன் கோயில், கும்பாபிஷேகம், D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில், மதுரையில் ரூ.49.74 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.51.77 கோடி மதிப்பு புதிய திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சங்க கால நகராக இருந்து மதுரையை, நவீன மதுரையாக தி.மு.க., அரசு மாற்றியது. தி.மு.க., ஆட்சியில் பல பாலங்கள் கட்டப்பட்டன. பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மதுரையை மேம்படுத்த வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிக்க 14 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

மதுரையில் ரூ.500 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும். சிறைச்சாலை மாநகராட்சி பகுதிக்கு வெளியே மாற்றப்படும். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் புதிதாக மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராகிறது. ரூ.114 கோடி செலவில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. ரூ.25 கோடியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். 2ஆண்டுகளில் மீனாட்சி கோயிலுக்கு குடமுழுக்கு ஏற்படுத்தப்படும்.


latest tamil news



அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண நிரந்தரமாக நவீன அரங்கம் அமைக்கப்படும். மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சை மையமும் நவீன அரங்கத்தில் இடம்பெறும்.342.33 கோடி மதிப்பு பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மக்களின்தேவையை கண்டறிந்து செயல்படும் அரசாக திமுக அரசு இருக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
21-ஜன-202220:11:24 IST Report Abuse
elakkumanan அப்போ, ரெண்டு வருசத்துக்கு மீனாக்க்ஷி அம்மன் கோவில் இடிக்கப்படாது .................இந்த மாதிரி அரசுகள் இருந்தால், இப்பிடித்தானே யோசித்து பழகிக்கணும்................கோயில் இடிக்கிறது, சாராயம் விக்கிறது, தள்ளுபடி (ஊரு மக்கள் காசை எடுத்துதான் ............சொந்த காச ................. வாய்ப்பில்லை ராசா................) கொடுக்கிறது , போட்டி தேர்வுக்கு எதிரா கோசம் போடுவது, பார் திறப்பது, போட்டோ எடுப்பது, ப்ராமின்களுக்கு எதிராக ( அவங்க எல்லாரும் நல்லா படிச்சு, பெரிய பெரிய வேலைக்கும், வெளி நாட்டுக்கும் போயாச்சு....சும்மா இங்கே காற்றில் கத்தி வீசி பிழைப்பு நடக்குது ) , இந்து கடவுள்களுக்கு காட்டுமிராண்டி பாஷை சொல்லித்தருவது, இந்து கோயில் நகைகளை உருக்கி வட்டி வாங்குவது, சும்மா வேலைக்கே வராத ஆசிரிய கண்மணிகளுக்கு சம்பளம் உயர்த்துவது, ....................நம்ம ஆட்சியில் வேற ஏதாவது விட்டு போயிருந்தா .......சொல்லுங்கோ...கருப்பு பலூன் விடுவது..........மறந்து போச்சு.....
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
21-ஜன-202219:38:50 IST Report Abuse
அறவோன் ரூ 25 கோடியை மக்கள் நல திட்டங்களுக்கு செலவழிக்கவும் 🙏
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
22-ஜன-202207:43:50 IST Report Abuse
Neutral Umpireமக்கள் அளிக்கும் வரியில் அரசாங்கம் செயல் படவேண்டும் ..கல்வி கூடங்கள் ..தரமான சாலை ...சுகாதாரம் ..ஆரோக்கியம் ..இவற்றுக்காக தான் வரி ..இலவச பல்பொடி ..அரிசி ...செருப்பு ...பொங்கலுக்கு அரிசி மஞ்சள் கரும்பு இவை மட்டுமே மக்கள் நல திட்டங்கள் என்றால் நாடு என்னாவது ...கூட முழுக்கு என்றால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் ..கோவிலையும் கோவிலை சார்ந்து நிறைய மக்களும் வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர் ...மெரினா சமாதி மேம்படுத்த ஆகும் செலவை விட குடமுழுக்குக்கு குறைவான பணமே ஒதுக்க போகிறார்கள் ......
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
21-ஜன-202219:25:41 IST Report Abuse
Neutral Umpire ரூ.25 கோடியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். 2ஆண்டுகளில் மீனாட்சி கோயிலுக்கு குடமுழுக்கு ஏற்படுத்தப்படும்...வரும் நாட்களில் பள்ளிக்குழந்தைகளுக்கு சூரிய நமஸ்காரம் கற்று தரப்படும் ..தேவாரம் திருவாசகம் பாட புத்தகங்களில் இடம் பெரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X