வெள்ளி முதல் வியாழன் வரை ( 21.1.2022 - 27.1.2022 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
சுக்கிரன், புதன், குரு சாதக நிலையில் உள்ளனர். ராமர் வழிபாடு நலம் அளிக்கும்
அசுவினி: முக்கியப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தைகளின் குறைகளை பக்குவமாக சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனஈடுபாட்டு, அக்கறையுடன் வேலை பார்ப்பீர்கள்.
பரணி: யாரிடமும் பேச்சிலும், செயலிலும் கடுமை காட்ட வேண்டாம். உங்களுக்குச் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். அதிக கவனத்துடன் செயல்படுங்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. அலுவலகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டுவர். பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும் அதற்கேற்ற திருப்திகரமான வருமானம் உண்டு.
சந்திராஷ்டமம்: 26.1.2022 இரவு 12:18 மணி - 28.1.2022 இரவு 2:42 மணி
ரிஷபம்

புதன், சந்திரனால் நற்பலன் உண்டு. கருடனை துதித்தால் கவலை பறக்கும்.
கார்த்திகை 2,3,4: பணியின் காரணமாக வெளியூர்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படக் கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பற்றிய தகவல் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
ரோகிணி: ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் தாமதமாகத்தான் கிடைக்கும். அதற்காக முயற்சிகள் அதிகமாக எடுக்க வேண்டி வரும். எந்த விஷயத்திலும் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருக்கும்.
மிருகசீரிடம் 1,2: மாணவர்கள் ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் வாங்குவர். பொறுப்புணர்வு அதிகரிக்கும். நிறைய நேரம் உழைப்பீர்கள். மனதில் உற்சாகம் நிரம்பியிருக்கும். பொழுது போக்குக்கு நேரம் இருக்காது.
மிதுனம்
ராகு, கேது, குரு, புதன் நன்மைகளை வாரி வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.
மிருகசீரிடம் 3,4: அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்ப்பு காணாமல் போகும். இதமாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் விஷயத்தில் கலகலப்பான சூழல் உண்டு.
திருவாதிரை: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். வீண்செலவு குறையும். வருமானம் அதிகரிக்கும் இந்த வாரம் தான் வளர்ச்சிக்கான நேரம்.
புனர்பூசம் 1,2,3: வழக்கில் நீங்கள் எதிர்பார்த்திருந்த நல்ல தீர்ப்பு வரும். தந்தையின் உடல்நிலை சீராகும். தந்தைவழிச் சொத்து பற்றிய பிரச்னை நல்ல முடிவுக்கு வரும்.
கடகம்
புதன், சந்திரன் அனுகூல பலனை தருவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் தரும்.
புனர்பூசம் 4: நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.
பூசம்: திருமண விஷயத்தில் தடைகள் இருந்தாலும் மனம் தளர வேண்டாம். விரைவில் நற்செய்தி கிடைக்கும். தொழிலில் லாபம் சீராக இருக்கும்.
ஆயில்யம்: பூர்வீக சொத்து விஷயத்தில் சுமுகமான உடன்பாடு ஏற்படும். அநாவசிய செலவுகள் இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
சிம்மம்
குரு, சனி, புதன், சந்திரன் நற்பலன்கள் தருவர். சூரியன் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகம்: அனுபவ பூர்வமான தீர்மானம் செய்து எல்லோரையும் கவர்வீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.
பூரம்: திட்டமிட்ட பயணம் தள்ளிப் போகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். புத்திசாலித்தனமான முடிவுகள் எடுப்பீர்கள். சவாலான விஷயங்களையும் சுலபமாக முடிப்பீர்கள்.
உத்திரம் 1: திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. குடும்பத்திலோ அல்லது உறவினர் வட்டத்திலோ திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மாணவர்களுக்குப் பொன்னான வாரம்.
கன்னி
சுக்கிரன், சந்திரன் புதன் நலமளிக்கும்படி உள்ளனர். அனுமன் வழிபாடு வளம் தரும்.
உத்திரம் 2,3,4: பணியிடத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயர முயற்சி செய்வீர்கள். நண்பர்கள் நன்மை உண்டாகும். சேமிக்க வாய்ப்புண்டு.
அஸ்தம்: உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு நீங்கும் அதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும். நீங்கள் எடுக்கும் தீர்மானங்களில், அனுபவ அறிவு வெளிப்படும்.
சித்திரை 1,2: விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புதிய கொள்முதல் செய்வீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள்.
துலாம்
குரு, சூரியன், சந்திரன் கூடுதல் நன்மைகள் அளிப்பர். நரசிம்மர் வழிபாடு நிம்மதி தரும்.
சித்திரை 3,4: மனைவி வகையில் மருத்துவ செலவு வரலாம். திடீர் இடமாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பணத் தேவைகள் நிறைவேறும். மனைவியின் சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
சுவாதி: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பெரிய முடிவுகளை எடுக்க இது உகந்த நேரம். பிள்ளைகளின் வகையில் அலைச்சல், செலவுகள் இருக்கும். வேலை சம்பந்தமாக தேர்வு எழுதியவர்களுக்கு வெற்றிக்கான செய்தி வரும்.
விசாகம் 1,2,3: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. பணியிடத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
சனி, சந்திரன், புதன் சுபிட்ச பலன் அளிப்பர். துர்கை வழிபாடு சுகம் தரும்.
விசாகம் 4: உஷ்ணம் காரணமாகச் சருமம் பாதிக்கப்படாமல் காத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரக் கூடும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
அனுஷம்: பல வேலைகளை இழுத்து போட்டுப் பார்க்க வேண்டி வரும். மற்றவர்களிடம் கூடுமானவரை வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படலாம்.
கேட்டை: தொழில்/ வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு கூடும். விருதுகள், பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை காண்பீர்கள்.
தனுசு
சந்திரன், ராகு, கேது, புதன் நற்பலன்கள் வாரி வழங்குவர். கிருஷ்ணர் வழிபாடு அமைதி தரும்.
மூலம்: எதிலும் நிதானமும் கவனமும் தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர், விட்டுக் கொடுத்து போவது நல்லது. அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை மீட்பீர்கள்.
பூராடம்: சகோதர உறவுகளால் செலவுகள், அலைச்சல் ஏற்படலாம். இருப்பினும் நல்லுறவு நீடிக்கும். தந்தை உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம். தொழில் விஷயமாக வெளியூர் செல்வீர்கள்.
உத்திராடம்1: பணியாளர்களுக்கு இருந்த மன உளைச்சல் நீங்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
மகரம்
செவ்வாய், கேது, சுக்கிரன், புதனால் நன்மை கிடைக்கும். திருமகள் வழிபாடு சுபிட்சம் தரும்.
உத்திராடம் 2,3,4: நீண்ட காலத்துக்குப் பிறகு குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். பணியிடத்தில் அதிகாரிகளின் ராஜதந்திரத்தை உணர்வீர்கள். புதிய முயற்சியில் அறிவாற்றல் காரணமாக வெற்றிடைவீர்கள்.
திருவோணம்: தடைப்பட்ட விஷயங்கள் தானாக கூடி வரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய தீர்மானங்கள எடுப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 20.1.2022 காலை 8:45 மணி - 22.1.2022 மாலை 4:00 மணி
கும்பம்
புதன், சுக்கிரன், செவ்வாயால் அபார நன்மை கிடைக்கும் சூரியன் வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம் 3,4: இளைஞர்கள் பெற்றோரின் அறிவுரையை ஏற்பது அவசியம். சம்பள உயர்வு பற்றி தகவல் வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை நீங்கும்
சதயம்: வலியப்போய் வழக்கு போட வேண்டாம். அழகும் இளமையும் அதிகரிக்கும். மற்றவர்களைக் கவருவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். மற்றவரின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு செயல்படுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: யாருக்கும் பணம் நகை வாங்கித் தர வேண்டாம். சுற்றி இருப்போரை அனுசரித்துப் போகாவிட்டால் மனக்கசப்பு உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய வாரம்.சந்திராஷ்டமம்: 22.1.2022 மாலை 4:00 மணி - 24.1.2022 இரவு 8:59 மணி
மீனம்
சூரியன், சனி நற்பலன்கள் அளிப்பர். ராகவேந்திரர் வழிபாடு வினை தீர்க்கும்.
பூரட்டாதி 4: பழைய வாகனத்தை மாற்றிப் புது வண்டி வாங்குவீர்கள். வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வசதியான வீடு அமையும். மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் குணமடைந்து வீடு திரும்புவர்.
உத்திரட்டாதி: வீடு கட்டுவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். உடல் நலத்தில் அலட்சியமாக இருக்காமல் உடனுக்குடன் மருத்துவரைப் பார்ப்பது நலம் தரும்.
ரேவதி: சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து இனிக்கும் செய்தி கிடைக்கும். மனதில் குதுாகலம் நிலவும். வழக்கு சம்மந்தமாக சமாதான தீர்வு வரலாம்.
சந்திராஷ்டமம்: 24.1.2022 இரவு 8:59 மணி - 26.1.2022 இரவு 12:18 மணி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE