புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா கேட் பகுதியில் அவரது சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் தினம் நாளை மறுநாள் (ஜன.,23) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், டில்லி ராஜபாதையில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமர்ஜவான் ஜோதி தேசிய போர் நினைவு சின்னத்துடன் இன்று இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: ஒட்டுமொத்த நாடும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்டமான கிரானைட் கற்களால் ஆன சிலை அமைக்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நேதாஜிக்கு இந்தியா செலுத்தக்கூடிய நன்றிக் கடனாகும். நேதாஜிக்கு பிரம்மாண்ட கிரானைட் சிலை அமைக்கும் பணி நிறைவடையும். மின் ஒளி வடிவிலான சிலையை நாளை மறுதினம் திறந்துவைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE