வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு விடுதலை பெற்ற பின்னர், டில்லியில் உள்ள சில குடும்பத்திற்காக மட்டும் கட்டுமான பணிகள் நடந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத்தில், சோம்நாத் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்த பிரதமர் பேசியதாவது; நமது முன்னோர்கள் நமக்கு ஏராளமானவற்றை அளித்து சென்றனர். ஆனால், நமது பாரம்பரியமிக்க மதம் மற்றும் கலாசாரத்தை பற்றி பேசுவதற்கு தயங்கிய காலம் முன்னர் இருந்தது.
சோமநாதர் கோயில் அழிக்கப்பட்ட சூழ்நிலை மற்றும் அந்த கோயிலை புதுப்பிக்க சர்தர் வல்லபாய் படேல் மேற்கொண்ட முயற்சிகள் நமக்கு ஓரு பெரிய செய்தியை அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை அளிக்கும் பங்கு மிகப்பெரியது. சுற்றுலாத்துறையின் ஆற்றலை உணர்ந்து கொள்ள கடந்த 7 ஆண்டுகளாக நாடு ஓய்வின்றி உழைத்தது.

சுற்றுலா மையங்களின் வளர்ச்சியானது அரசு திட்டங்களின் மூலம் மட்டும் அல்லாமல், பொது மக்களின் பங்கேற்ற பிரசாரமும் காரணம்.சுற்றுலா துறை மேம்பாடு அடைய, சுத்தம், சுற்றுலா பயணிகளின் நேரத்திற்கு மரியாதை, நவீன சிந்தனை மற்றும் வசதிகள் ஆகியன முக்கியம். வழிபாட்டு தலங்கள் மற்றும் பாரம்பரிய இடங்கள் வளர்ச்சி பெறுவது, அந்த இடங்கள் அமைந்துள்ள பகுதிகளின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்
நாடு விடுதலைக்கு பிறகு, டில்லியில் உள்ள சில குடும்பங்களுக்காக மட்டும் கட்டுமானங்கள் நடந்தன. இந்த குறுகிய சிந்தனையில் இருந்து தேசத்தை நாம் வெளியே கொண்டு வந்துள்ளதுடன், புதிய தேசிய முக்கியத்துவம் சின்னங்களை அமைத்துள்ளதுடன், ஏற்கனவே உள்ள சின்னங்களுக்கும் புகழை சேர்த்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE