கார் குண்டுவெடிப்பால் சிறை தகர்ப்பு; பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (6)
Advertisement
டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை அடைத்து வைத்திருந்த சிறையின் கேட்டை கார் வெடிகுண்டு மூலம் வெடித்து தகர்க்கப்பட்டது. இதில், சிறையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் பல நாடுகள் தீவிரமாக இறங்கின. இதில் அமெரிக்காவிற்கு
IS Attacks, Syria Prison, Freeing Jihadists, ஐஎஸ், பயங்கரவாதிகள், சிறை, சிரியா, கைதிகள், தப்பியோட்டம்

டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை அடைத்து வைத்திருந்த சிறையின் கேட்டை கார் வெடிகுண்டு மூலம் வெடித்து தகர்க்கப்பட்டது. இதில், சிறையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் பல நாடுகள் தீவிரமாக இறங்கின. இதில் அமெரிக்காவிற்கு சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்த குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் படைகளும் உதவியது. ஐ.எஸ் பயங்கரவாதிகளை கைது செய்து அங்குள்ள சிறைகளில் அடைத்து அவர்களை கண்காணித்து வந்தனர். குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஹவெரன் என்ற சிறையிலும் நூற்றுக்கணக்கான ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், ஹவெரன் சிறையில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. சிறை கேட் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வேகமாக வந்து மோதியது. இதில் கார் வெடித்து சிதறியதுடன், சிறை கேட்டும் சேதமடைந்தது. இதனைதொடர்ந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளையும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் விடுதலை செய்தனர். இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறையில் இருந்து தப்பிச்சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் இவர்களைப் பார்த்தால் லுங்கி கட்டிய யூதர்கள் போல் தெரிகிறதே!.
Rate this:
Cancel
21-ஜன-202215:18:08 IST Report Abuse
ராமகிருஷ்ணன் சிறையில் அடைத்தாலும் பயங்கரவாத செயல்களின் மூலம் தப்பிக்கவே செய்கிறார்கள் என்றால், கைது செய்த உடன் கொன்று விடுவது உத்தமம்.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
21-ஜன-202215:05:53 IST Report Abuse
abibabegum எங்கள் மார்க்கம் அமைதிமார்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X