வார இறுதி ஊரடங்கை நீக்க டில்லி அரசு பரிந்துரை; கவர்னர் நிராகரிப்பு

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தி வந்தனர். தற்போது கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் வார இறுதி ஊரடங்கை நீக்குமாறு டில்லி அரசு அளித்த பரிந்துரையை ஏற்க துணை நிலை கவர்னர் மறுத்துவிட்டார்.டில்லியில் வியாழனன்று 12,306 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதற்கு முந்தைய 24 மணி நேர
Delhi, Recommend, WeekendCurfew, Restriction, Markets, governor, private company,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தலைநகர் டில்லியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தி வந்தனர். தற்போது கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் வார இறுதி ஊரடங்கை நீக்குமாறு டில்லி அரசு அளித்த பரிந்துரையை ஏற்க துணை நிலை கவர்னர் மறுத்துவிட்டார்.

டில்லியில் வியாழனன்று 12,306 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதற்கு முந்தைய 24 மணி நேர எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது 10.72 சதவீதம் குறைவு. ஜனவரி 14 அன்று கிட்டத்தட்ட 30,000 என்ற உச்சத்தில் இருந்தது தொற்று எண்ணிக்கை தற்போது பாதிக்கும் கீழ் சரிந்துள்ளது. இருப்பினும் ஏற்கனவே தொற்றுக்கு ஆளான 70 ஆயிரம் பேர் கண்காணிப்பிலும் சிகிச்சையிலும் உள்ளனர். சுமார் 60 ஆயிரம் முதல் 1 லட்சம் மாதிரிகள் தினமும் பரிசோதிக்கப்படுகின்றன. 13,000 படுக்கைகள் காலியாக உள்ளன.


latest tamil news


எனவே வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்க துணைநிலை கவர்னருக்கு டில்லி அரசு இன்று பரிந்துரைத்துள்ளது. பொது இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒற்றைப்படை - இரட்டைபடை இலக்கம் கொண்டு திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகள், இனி அனைத்து நாட்களிலும் திறக்கலாம், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். முடிந்தவரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். என பரிந்துரையில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக துணை நிலை கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்றலாம் என்ற முடிவை ஏற்று கொள்ளப்படுகிறது. ஆனால், வார இறுதி ஊரடங்கு தளர்வு சந்தைகள் திறப்பது உள்ளிட்டவற்றில் தற்போதைய நிலையே நீடிக்கும். கோவிட் சூழ்நிலை இன்னும் மேம்படும் சூழ்நிலையில் அது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-ஜன-202217:58:29 IST Report Abuse
A.George Alphonse Very good decision by Governor.
Rate this:
Cancel
Rathnam Mm - chennai,இந்தியா
21-ஜன-202217:08:06 IST Report Abuse
Rathnam Mm well did by Governer of Delhi, Thanx
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
21-ஜன-202215:54:13 IST Report Abuse
DVRR வார இறுதி ஊரடங்கு தளர்வு சந்தைகள் திறப்பது உள்ளிட்டவற்றில் தற்போதைய நிலையே நீடிக்கும்.???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X