காரிமங்கலம்: ''மக்களை ஏமாற்றி திசை திருப்பவே இதுபோன்ற ரெய்டுகள் நடத்தப்படுகின்றன,'' என, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் மாஜி., அமைச்சர் அன்பழகன் வீடு மற்றும் உறவினர் ஆதரவாளர்கள் வீடுகள், கடைகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கெரகோடஹள்ளியில் சோதனை நடந்த இடத்திற்கு வந்த மாஜி., அமைச்சர் முல்லைவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தாரோ அதை நிறைவேற்றவில்லை. மொத்தத்தில் அவர் எதையுமே செய்யவில்லை. இந்த மாவட்டத்திலுள்ள தூள்செட்டி ஏரியில் தண்ணீர் கொண்டு வருகிறேன் என சொல்லி நேரிலேயே சென்று கூட்டம் போட்டு நாடகமாடினார். இதையெல்லாம் மறைக்க மாஜி., அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடத்துகிறார். லஞ்ச ஒழிப்பு சோதனை என்கிற பெயரால், இந்த அடக்குமுறை நடக்கிறது. தன் மூலம், மக்களை திசை திருப்புவதற்காக, ஒரு நாடகம் தான் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட அராஜகத்தை அடக்குமுறையை, பழிவாங்கும் அரசியலை பொங்கல் திருநாளில் கூட விட்டு வைக்காமல் செய்கிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE