பொங்கல் பரிசுத் தொகுப்பு; தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (55) | |
Advertisement
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு; தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான ஆய்வுக் கூட்டம்
பொங்கல் பரிசு, பொருட்கள், புகார்கள், முதல்வர், ஸ்டாலின், ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு; தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.,21) நடைபெற்றது. பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்தும் முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம், சரியான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன. மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் சில குறைபாடுகள் இருந்ததாக புகார்கள் வரபெற்றன. இவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


latest tamil news


உரிய தரத்துடன் பொருட்களை வழங்கத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார்.


latest tamil news


அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும் முதல்வர் தெரிவித்தார். நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படம் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டுமென்றும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றம் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sethu Thangavelu - Chennai,இந்தியா
25-ஜன-202213:14:23 IST Report Abuse
Sethu Thangavelu முதல்வரை இளவு காத்த கிளி என்று சொன்னதால் ,மிளகு க்கு பதில் இலவம் பஞ்சு விதை கொடுத்து சாப்பிட வைத்துள்ளார்கள் . விடியல் அரசு
Rate this:
Cancel
Rajesh - Ontario,கனடா
23-ஜன-202201:30:20 IST Report Abuse
Rajesh கடுமையான நடவடிக்கை என்றால் அவர்களிடம் வாங்கிய காசு போதாது இன்னும் நிறைய வாங்க வேண்டும் என்று பொருள் ... அந்த நிறுவனங்களின் பெயரை வெளியிடுமா இந்த thiruttu மு க அரசு
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
22-ஜன-202210:21:22 IST Report Abuse
jayvee இரண்டு அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளை காப்பற்ற என்ன வேணாலும் செய்வார்கள் .. முதலில் இது பற்றி முறையீடு செய்த தனி நபர் கொல்லப்பட்டார் (மன உளைச்சலால் தற்கொலை செய்த்க்கொள்வது அதற்க்கு சமமே ) .. அதை பற்றி ஒரு RSB மீடிவிலிருட்னது ஒரு ஆண்மகன் கூட ( அதெப்பெடி இருக்கமுடியும் என்று கேட்கிறீர்களா ) பேச முன் வரவில்லை .. இதை திசை திருப்ப போலி ஆஸ்கர் விருதுகள் .. (யுனெஸ்கோ விருது போல)
Rate this:
Nakkeeran - Hosur,இந்தியா
24-ஜன-202213:48:23 IST Report Abuse
Nakkeeranஒரு பை அதற்க்கு இரண்டு கைப்பிடி இருப்பதை மறந்து விட்டீர்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X