முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Added : ஜன 21, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி மூன்றாவது தவணை செலுத்தும் பணி நேற்று நடந்தது. சூளகிரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கூறுகையில், ''கொரோனா தொற்றை தடுக்க சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல்துறை அலுவலர்கள் முன்கள பணியாளர்களாக

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி மூன்றாவது தவணை செலுத்தும் பணி நேற்று நடந்தது. சூளகிரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கூறுகையில், ''கொரோனா தொற்றை தடுக்க சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல்துறை அலுவலர்கள் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்றுவரை, 1,606 பேருக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள் அனைவரும் குறிப்பாக சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறையினர் மற்றும் பொதுமக்களிடம் தொடர்பிலுள்ள அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும், மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X