ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கதவணி கண்ணானூரில், வேளாண் துறை, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில், மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது. பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர், பேராசிரியர் பரசுராமன் தலைமை வகித்து, தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடி, படைப்பு பற்றி பேசினார். ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குனர் தாமோதரன், ஊத்தங்கரை வட்டாரத்தில், ஏழு வருடங்களுக்கு முன், 10 ஆயிரம் ஹெக்டேர், மக்காசோளம் பயிரிடப்பட்டது. தற்போது இப்படைப்புழுவினால், மக்காச்சோள சாகுபடி பரப்பளவு பெரிதும் குறைந்து விட்டது. இதனால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறையை, விவசாயிகள் பின்பற்றி பயனடைய அறிவுறுத்தினார். பையூர் மண்டல, ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் உதவிப் பேராசிரியர் கோவிந்தன், படை புழுவை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளான, கடைசி உழவில் வேப்பம்புண்ணாக்கு, ஒரு ஏக்கருக்கு, 100 கிலோ இடுதல், விதை நேர்த்தி செய்தல், வரப்பு பயிர் விதைத்தல், இன கவர்ச்சி பொறி அமைத்தல், இரண்டு முறை பூச்சிக்கொல்லி தெளிப்பு பற்றி, விவசாயிகளிடம் கண்காட்சி மூலம் விளக்கினார். பயிற்சியில், முனைவர் குரு, முனைவர் பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE