கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள, பத்தாவது, பிளஸ் 1, பிளஸ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் பரிசோதனை நேற்று, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடந்தது. இதற்காக கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் இருந்து, 40 மாணவர்கள் வந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து, விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு சான்றிதழ் வழங்குவர். ஆனால் நேற்று காலை, 9:00 மணிக்கு வந்த மாணவர்களை மருத்துவமனை ஊழியர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் மாணவர்கள் அமர கூட இடமில்லாமல் தரையில் அமர்ந்தும், முடியாமல் நின்று கொண்டும் இருந்தனர். மூன்று மணி நேரத்திற்கு பின் வந்த ஊழியர்கள் அவர்களது விண்ணப்பங்களை பெற்ற பின்னரே, மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், உடல் பரிசோதனை சான்றிதழ் உடனே தரமுடியாது மாலை வரை காத்திருங்கள் எனக்கூறி சென்றதால், மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தின் நடைபாதை பகுதியிலேயே காத்து கிடந்தனர். கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் மாணவர்களுக்கு தனியாக உடல் பரிசோதனை மேற்கொள்ளாமல், மருத்துவமனை வளாகத்திலேயே நீண்ட நேரம் அமர வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE