வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் வேலூர் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 30 நாள் பரோலில் விடுதலையான நளினி, காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி.,க்கு, நளினி நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: என் கணவர் முருகன், 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவருக்கு பல்வேறு விதமான உடல் நலக்குறைபாடுகள் உள்ளன. எட்டு கடவாய் பற்கள் மீண்டும் கட்ட வேண்டும். கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். உடல் நலத்திற்காக, பலவித சிகிச்சைகள் மேற்கொள்ளவும், குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE