பயணி முகக்கவசம் அணிய மறுப்பு: லண்டன் சென்ற விமானம் அமெரிக்கா திரும்பியது

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 21, 2022 | கருத்துகள் (12)
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட்லைனர் விமானம், பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்த காரணத்தால் நடுவானிலிருந்து திரும்பி வந்தது.அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஜனவரி 2021ல் தங்களது விமானங்களில் முகக்கவசம் அணிவதை கடுமையாக்கியது. முகக்கவசம் அணிய மறுப்பவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது என
பயணி, முகக்கவசம், லண்டன், விமானம், அமெரிக்கா, திரும்பியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட்லைனர் விமானம், பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்த காரணத்தால் நடுவானிலிருந்து திரும்பி வந்தது.

அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஜனவரி 2021ல் தங்களது விமானங்களில் முகக்கவசம் அணிவதை கடுமையாக்கியது. முகக்கவசம் அணிய மறுப்பவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது என அப்போது அறிக்கை வெளியிட்டது. முன்னதாக பயணிகள் பலரும் முகக்கவசம் அணிய மறுத்து பணிப்பெண்களை திட்டுவதும், தொல்லை தருவதுமாக இருந்தனர். அதனால் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை இம்முடிவை எடுத்தது.


latest tamil news


இந்நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மியாமியில் இருந்து 129 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் வியாழனன்று லண்டனுக்கு புறப்பட்டது. அதில் விதியை பின்பற்றாமல் ஒரு பயணி முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். பயணிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பணிப்பெண்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் நடுவானிலிருந்து விமானம் மீண்டும் மியாமி திரும்பியது. முன்னதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியது, போலீசார் முகக்கவசம் அணியாத நபரை இறக்கி அழைத்துச் சென்றனர். அவரை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடைசெய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் சேர்த்தது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
22-ஜன-202210:09:44 IST Report Abuse
jayvee அமெரிக்காவின் இடதுசாரி பெண்ணாகயிருப்பாளோ
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-ஜன-202208:36:35 IST Report Abuse
NicoleThomson இதனை தமிழக RSB ஊடகங்கள் எப்படி சொல்லிஇருக்கும் ? ஒரு கற்பனை "ஒன்றிய அரசின் " கட்டுப்பாட்டில் இருக்கும் விமான போக்குவரத்து துறை இன்று ஒரு பெண் என்றும் பாராமல் 40 வயது பெண்ணை வழியில் இறக்கி விட்டு சென்றது , இதனை வன்மையாக கண்டிக்கிறோம் . உடனே தோழர் இலவச பிரியாணி , போராட்டங்களை அறிவித்தார் , நடிகர் அடுத்த படத்தில் இதனை ஒரு மையமாக வைத்து படம் எடுக்க போகிறார் என்றும் கேள்வி , "கலெக் ஷன், கமிஷன், கரெப்ஷன்" CCC கட்சியின் தலைவர் அவரது குடும்ப டிவி சேனல்களில் இதனை முழு அளவில் கண்டனத்துக்குரிய செய்தியாக வெளியிட ஏற்பாடு செய்தார் மற்றவை பின்னர்
Rate this:
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
21-ஜன-202220:28:20 IST Report Abuse
Gokul Krishnan அதிக சுதந்திரம் மிக ஆபத்து என்பதற்கு இந்த மேதாவி அமெரிக்கர்கள் முன் உதாரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X