வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பார்ல்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் அரைசதம் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 287 ரன் குவித்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி பார்ல் நகரில் நடந்தது. இந்திய 'லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் 'ஆல்-ரவுண்டர்' மார்கோ ஜான்சென் நீக்கப்பட்டு வேகப்பந்துவீச்சாளர் சிசண்டா மகாலா சேர்க்கப்பட்டார்.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ஷிகர் தவான் (29) நல்ல துவக்கம் தந்தார். விராத் கோஹ்லி 'டக்-அவுட்' ஆனார். பின் இணைந்த கேப்டன் ராகுல் (55), ரிஷாப் பன்ட் (81) அரைசதம் கடந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் (11) நிலைக்கவில்லை. வெங்கடேஷ் ஐயர் (22) ஆறுதல் தந்தார். கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் (40*), அஷ்வின் (25*) கைகொடுத்தனர்.
இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஷம்சி 2 விக்கெட் கைப்பற்றினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE