சிதம்பரம்: சிதம்பரத்தில் கோரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே குடும்பத்தில் 5 பேர் தோற்று பரவிதை அடுத்து அந்த தெரு முற்றிலும் அடைக்கப்பட்டது. \
தமிழகத்தில் கோரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொற்று பரவும் வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்குள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமே 281 பாதித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 40 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக சிதம்பரம் நகரத்திலும் உயர்ந்து வந்தது. மார்க்கெட் மால் வணிக நிறுவனங்கள் என மக்களின் கூட்டமும் அதிகரித்தால் தொற்று பரவும் வேகம் எடுத்தது.
இந்நிலையில் நேற்றைய நிலையில் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் மாலை கட்டி தெருவில் ஒரே குடும்பத்தில் 5 பேர், எதிர்வீட்டில் 3 பேர் உட்பட 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த தெருவை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து நகராட்சி ஊழியர்கள் அடைத்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கவனமாகவும் பாதுகாப்புடனும் இருக்க சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE