சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கடைத் தேங்காயை எடுத்து...!

Added : ஜன 21, 2022 | |
Advertisement
கடைத் தேங்காயை எடுத்து...!'ஆதாயம் இல்லாமல் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த மாட்டார்களே; இதன் பின்னணி என்னவாக இருக்கும்...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகம் எழுப்புகின்றனர், எதிர்க்கட்சியினர்.மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு

அக்கம் பக்கம்


கடைத் தேங்காயை எடுத்து...!



'ஆதாயம் இல்லாமல் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த மாட்டார்களே; இதன் பின்னணி என்னவாக இருக்கும்...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகம் எழுப்புகின்றனர், எதிர்க்கட்சியினர்.
மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, தடுப்பூசி பணியை விரைவுப் படுத்துவது போன்றவற்றை செய்யாமல், மம்தா பானர்ஜி வேறு ஆட்டம் ஆடுகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கணக்கெடுத்து, அவர்களது வீடுகளுக்கு பழங்கள் நிறைந்த கூடையை அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர், அரசு அதிகாரிகள். இந்த பெட்டியில் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் ஆகியவற்றுடன், சிறிய அட்டையும் உள்ளது. அதில், 'நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறார் முதல்வர் மம்தா' என, எழுதப்பட்டுள்ளது; அதில் மம்தா படமும் இடம் பெற்றுள்ளது.சுகாதாரப் பணிகளில் ஈடுபட வேண்டிய அதிகாரிகளும், ஊழியர்களும், இந்த பழக்கூடையை துாக்கியபடி வீடு வீடாக அலைந்து திரிகின்றனர்.
இதைப் பார்த்து கடுப்பான எதிர்க்கட்சியினர், 'கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறதே... மம்தாவை விளம்பரப்படுத்த மக்களின் வரிப் பணம் தான் கிடைத்ததா...' என, கொதிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X