சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஏன் இவ்வளவு ஆர்வம்?

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (1)
Advertisement
ஏன் இவ்வளவு ஆர்வம்?எஸ்.பாரதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே... காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...' என்று, ஒரு பழைய பாடல் இருக்கிறது.தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வும், மாநில தேர்தல் ஆணையமும், பிற அரசியல் கட்சிகளும், அந்த பாட்டின், 'டியூனு'க்கேற்பத் தான் நடனமாடுகின்றன.கொரோனா தொற்று


ஏன் இவ்வளவு ஆர்வம்?எஸ்.பாரதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே... காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...' என்று, ஒரு பழைய பாடல் இருக்கிறது.தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வும், மாநில தேர்தல் ஆணையமும், பிற அரசியல் கட்சிகளும், அந்த பாட்டின், 'டியூனு'க்கேற்பத் தான் நடனமாடுகின்றன.கொரோனா தொற்று பரவல் குறைந்தபாடில்லை. அது சுற்று ஒன்று, இரண்டு என்று வலம் வந்து, தற்போது, 'ஒமைக்ரான்' என மூன்றாவது சுற்றில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவிய நாள் முதல், இந்தியாவில் இதுவரை, 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பர் என்று, அமெரிக்க புள்ளி விபர நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 2020 செப்., 30ம் தேதி வரை, ஆறு லட்சம் பேர்
உயிரிழந்துள்ளனர்.நாட்டில் கொரோனா பரவிக் கொண்டிருந்த போது, சட்டசபைத் தேர்தலை நடத்தியதே மாபெரும் தவறு.

சட்டசபையை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தி, தொற்று பரவல் குறைந்த பின், தேர்தலை நடத்தி இருக்கலாம்; ஆனால் செய்யவில்லை.சட்டசபைக்கான தேர்தலை, கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போதே தேர்தல் ஆணையம் நடத்தி முடித்து விட்டது.அதனால் ஆணையம் கண்ட பலன் தான் என்ன?தற்போது மாநில தேர்தல் ஆணையத்தின், 'டர்ன்!''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம்' என்று, மாநில தேர்தல் ஆணையம் ஒற்றைக்காலில் பிடிவாதம் பிடித்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், நாட்டில் என்ன நிர்வாகம் ஸ்தம்பித்து நிலைகுலைந்து நிற்கிறது?திட்டப்பணிகளில் அரசியல் கட்சிகளுக்கும், அதன் பிரதிநிதிகளுக்கும், 'கமிஷன்' சென்று சேராமல், அதிகாரிகள் மட்டத்திலேயே பங்கு பிரித்துக் கொள்ளப்
படுகிறது.அது பொறுக்க மாட்டாமல் அரசியல்வாதிகள், 'உள்ளாட்சி தேர்தல்' என்று, கூப்பாடு போடுகின்றனர்.மாநில தேர்தல் ஆணையமும் அந்த இசைக்கேற்ப, தாளம் விலகாமல் நடனமாடுகிறது.கொரோனா முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து விலகும் வரை, அந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைப்பதால், குடியா முழுகி விடப் போகிறது?அதை செய்யாமல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதிலேயே ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஏன் ஆர்வமாய் உள்ளன?மக்கள் சேவையாவது, மண்ணாங்கட்டியாவது!எல்லாம், 'கலெக் ஷன், கமிஷன், கரெப்ஷன்' என்ற கொள்கைக்காகத் தான்!


மது விற்க மட்டும் முடியுதா?வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: கொரோனா பரவல் என்ற காரணத்தைச் சொல்லி, வாரக்கடைசி நாட்களில் வழிபாட்டுத்தலங்களை மூடுகிறது, தமிழக அரசு.
இதனால் மற்ற நாட்களில், கோவில்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. வார இறுதி நாட்களில், வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு தடை விதிப்பதில் எவ்விதப் பலனும் இல்லை.
வாரம் முழுதும் கோவில் திறந்திருந்தால், கூட்டம் அலைமோதாது; நெரிசலுக்கு வாய்ப்பே இருக்காது.மேலும் பண்டிகை நாட்களில், கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவர் என்பதற்காக வழிபாட்டிற்கு தடை விதித்தால், அது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும்.எனவே காவல் துறை உதவியுடன், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து, வழிபாட்டிற்கு அனுமதிக்கலாம்.'டாஸ்மாக்' கடை முன் வரிசைக்கட்டி நிற்க சொல்லி, 'குடி'மகன்களுக்கு மது விற்பனை செய்யும் அரசால், கோவில்களில் பக்தர்களை ஒழுங்குப்படுத்த முடியாதா?
கொரோனா பரவல் காலத்திலும், மது விற்பனையை கைவிடாத தமிழக அரசு, பக்தர்களின் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிப்பது சரியா?


தி.மு.க.,வும் தேசப்பற்றும்!எஸ்.ராமகிருஷ்ணன், கோ வையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்' என்ற சொலவடை, கிராமப்புறங்களில் புழக்கத்தில் உள்ளது. இதை முற்றிலும் கையாளுவது, தி.மு.க., அரசு தான் என்பதில் சந்தேகமே இல்லை!பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் நலத்திட்டங்கள் எதைச் செய்தாலும், அதில் கற்பனையாக ஒரு காரணத்தை கற்பித்து அவதுாறு பரப்புவது, தி.மு.க., அரசின் அன்றாட
பணியாக உள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட காங்கிரஸ், வி.சி., மற்றும் சில, 'லெட்டர் பேடு' கட்சிகள் என, ஒரு பெரிய கூட்டத்தையே, தி.மு.க., கைவசம் வைத்துள்ளது.அந்த வகையில் தற்போது கையில் எடுத்துள்ள விஷயம், குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு.குடியரசு தின விழாவுக்கான அலங்கார ஊர்தி எவ்வாறு வடிவமைக்க வேண்டும், அதன் கருப்பொருள் எவ்வாறு இருக்க வேண்டும் போன்ற பல விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன.
அதன் அடிப்படையில் ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. இதில் அரசியல் கலப்பு துளி கூட இல்லை.
அலங்கார ஊர்திகளின் தேர்வுப் பணியை, இந்திய பாதுகாப்புத் துறையால் நியமனம் செய்யும் வல்லுனர் குழு தான் மேற்கொள்ளும்; இதில் எந்த தலையீடும் இல்லை.இந்த ஆண்டு தமிழக அரசு பரிந்துரை செய்து அனுப்பிய ஊர்தி, தேர்வுக் குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. எந்த அடிப்படையில் இது தேர்வாகவில்லை என்பதற்கான காரணங்கள் நிச்சயம் இருக்கும்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காலம் தாழ்த்தாமல் உடனே பதில் அனுப்பியுள்ளார். இத்துடன் இந்த பிரச்னை முடிந்து விட்டது.இதற்கு முந்தைய ஆண்டுகளான, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில், தொடர்ச்சியாக மூன்று முறை தமிழகத்தின் அலங்கார ஊர்தி, குடியரசு தின ஊர்வலத்தில் இடம்பெற்றுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தரப்பிரதேசத்தின் அலங்கார ஊர்தி, ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்வாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.தி.மு.க.,வுக்கு எப்போதுமே தேசிய சிந்தனை இருந்தது கிடையாது; இவர்களின் பேச்சும், செயலும் பிரிவினை சார்ந்ததாகவே இருக்கும்.சுதந்திரத் தினத்தை, 'கறுப்பு தினம்' என்று அறிவித்த ஈ.வெ.ரா.,வின் சிலைகள் தானே, மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நிறுவப்பட்டுள்ளது.
'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை கூட, தி.மு.க., வுக்கு பிடிக்காதே!தி.மு.க.,வினருக்கும், தேசப்பற்றுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
22-ஜன-202211:53:37 IST Report Abuse
raja அவங்களுக்கு அல்லேலூயா, இன்சா அல்லான்னு சொல்லித்தான் பழக்கம்... ஜைஹிந்து அப்படின்னா எண்ணான்னுள்ள கேப்பானுவோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X