சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

24 வருஷங்களாக அமலுக்கு வராத அரசாணை!

Added : ஜன 21, 2022 | கருத்துகள் (2)
Advertisement
24 வருஷங்களாக அமலுக்கு வராத அரசாணை!''நம்ம வெற்றியை தடுக்கிறதுல சின்னத்துக்கும் பங்கிருக்குன்னு இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.''எந்தக் கட்சியினரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''த.மா.கா.,வினரை தான்... அ.தி.மு.க., ஆட்சியில நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்ல, கோவை மாவட்டம், அன்னுார் ஒன்றிய தேர்தல்ல,


டீ கடை பெஞ்ச்


24 வருஷங்களாக அமலுக்கு வராத அரசாணை!


''நம்ம வெற்றியை தடுக்கிறதுல சின்னத்துக்கும் பங்கிருக்குன்னு இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''எந்தக் கட்சியினரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''த.மா.கா.,வினரை தான்... அ.தி.மு.க., ஆட்சியில நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்ல, கோவை மாவட்டம், அன்னுார் ஒன்றிய தேர்தல்ல, த.மா.கா.,வுக்கு வெற்றி வாய்ப்பு இருந்த வார்டுகள்ல, கடைசி நேரத்துல, சின்னம் தேர்வு செய்றதுல ஏற்பட்ட தாமதத்தால, கம்மியான ஓட்டு வித்தியாசத்துல தோத்து போயிட்டாங்க பா...

''வர்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல, அன்னுார் பேரூராட்சியில மூணு வார்டுகள்ல த.மா.கா.,வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கு தாம்... அதனால, சென்னை ஐகோர்ட்ல நிலுவையில இருக்கிற சைக்கிள் சின்னம் வழக்கை சீக்கிரமா முடிச்சு சின்னத்தை வாங்க போறாங்களாம் பா...

''இல்லாட்டி, 'ஆட்டோ அல்லது தென்னை மரம்னு, எதாவது ஒரு சின்னத்தை முன்கூட்டியே வாங்கி, வாக்காளர்களிடம் பிரபலப்படுத்துனா, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல கணிசமான இடங்கள்ல ஜெயிச்சிடலாம்'னு நிர்வாகிகள் சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''அது சரி... நம்பிக்கை தானே வாழ்க்கை...'' என சிரித்த அண்ணாச்சி, ''நகராட்சியை கட்சி ஆபீஸ் மாதிரி ஆக்கிட்டாங்கல்லா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கு சென்னை தலைமை செயலகத்துல இருந்த கணேசன்னு ஒரு அதிகாரியை கமிஷனரா நியமிச்சிருக்காவ... தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பணி மாறுதல்ல நகராட்சி பணிக்கு வந்த பலர், கமிஷனரிடம் தங்களுக்கு செல்வாக்கு இருக்குன்னு காட்டிக்கிட்டு, ஓவரா ஆட்டம் போடுதாவ வே...

''நகராட்சி ஆபீஸ், தி.மு.க., கட்சி ஆபீஸ் மாதிரி ஆயிட்டு... இவங்க பண்ற அக்கப்போரால, சுகாதார பணி துவங்கி, வளர்ச்சி திட்ட பணிகள்னு எதுவும் சரியா நடக்கல வே... நகராட்சி பகுதியில கொரோனா வேகமா பரவிட்டு இருக்கு... நகர் முழுக்க குப்பை தேங்கி கப்பு அடிக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.

''அரசாணை போட்டு, அப்படியே அந்தரத்துல விட்டுட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.

''எந்த துறை விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''நகராட்சி மற்றும் பேரூராட்சிகள்ல இருக்கிற குடிநீர் இணைப்புகளுக்கு ஏற்ப, குடிநீர் திட்ட பராமரிப்பு ஊழியர் பணியிடங்களை உருவாக்க, 1998ல தி.மு.க., ஆட்சியில, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒரு அரசாணை
போட்டுச்சுங்க...

''இதன்படி, 2,000 குடிநீர் குழாய்களுக்கு ஒரு குழாய் ஆய்வாளர், 15 கி.மீ., நீளம் உள்ள பிரதான பகிர்மான குழாய்க்கு, ஒரு தலைமை நீரேற்ற நிலைய பொருத்துனர் உட்பட பல பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில நிரப்புறதா சொல்லியிருந்தாங்க...

''வருஷா வருஷம் மக்கள் தொகை அதிகரிக்குது... பல ஆயிரம் கோடி ரூபாய் செலவுல, புதிய குடிநீர் திட்டங்கள் வகுக்குறாங்க...

''ஆனா, 1998 அரசாணைப்படி, குடிநீர் பணிகளை மேற்கொள்ள பணியிடங்களை உருவாக்கவே இல்லைங்க... சொற்ப அளவு பணியாளர்களை வச்சு தான், குடிநீர் பராமரிப்பு பணிகளை செய்றாங்க... '24 வருஷமா செயலுக்கு வராத அரசாணையை இனியாவது செயல்படுத்தணும்'னு, இந்தத் துறை ஊழியர்கள் சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
22-ஜன-202219:24:49 IST Report Abuse
r.sundaram இந்த குடிநீர் பணியாளர்கள் குறைவினாலேயே பல இடங்களில், அதுவும் குறிப்பாக தாமிரபரணி என்னும் ஜீவ நதி ஓடும் திருநெல்வேலியில் பல இடங்களில், ஐந்து நாட்கள் அல்லது ஆறு நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் விநியோகம் நடக்கிறது. தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லை. வேலையாட்களுக்குத்தான் தட்டுப்பாடு.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
22-ஜன-202219:23:23 IST Report Abuse
GANESUN ஆகா.. குழாய் ரிப்பேருக்கு ஆள் பிடிச்சு கட்டிங்குக்கு வழி காட்டிய தினமலர் வாழ்க.. இப்படிக்கு, விடியல் அரசின் கட்டிங், கமிஷன், கரப்ஷன் உபிஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X