ஜன., 22, 1922
ஈரோடில், 1854 ஏப்ரல் 12ம் தேதி பிறந்தவர், சேலம் பகடால நரசிம்மலு நாயுடு. இவரது தாய்மொழி, தெலுங்கு. சிறுவயது முதலே கட்டுரைகள் எழுதத் துவங்கினார். 1877ல், 'சுதேசாபிமானி' என்ற இதழைத் துவங்கினார். பல சுவடிகளையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்து, 'தட்சிண இந்திய சரிதம்' என்ற நுாலை எழுதினார். 'ஆர்ய சத்திய வேதம், தென்னிந்திய சரிதம், பலிஜவாரு புராணம்' உட்பட 94 நுால்களை எழுதிப் பதிப்பித்தார்.கடந்த, 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானபோது, கோவையில் அதன் கிளையை உருவாக்கினார். நீலகிரியில், 'ஸ்டேன்ஸ் மில்' மற்றும் கோவையின் முதல் சர்க்கரை ஆலையை, போத்தனுாரில் அமைத்தார்.'டவுன் ஹால்' எனப்படும் 'விக்டோரியா முனிசிபல் ஹால்' மற்றும் சிறுவாணியில் அணையைக் கட்டி கோவைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ஆகியவை இவரால் முன் வைக்கப்பட்டு,
நிறைவேற்றப்பட்டன. ஏழை, பால்ய விதவைப் பெண்களுக்குக் கல்வியளித்து, அவர்களுக்கு மறுமணம் செய்விக்க அறக்கட்டளை ஒன்றை அமைத்தார். 'கோயம்புத்துார் பத்ரிகா' என்ற வாரச் செய்தி இதழை வெளியிட்டார். 'கலாநிதி அச்சகம்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
கடந்த, 1922 ஜனவரி 22ம் தேதி தன் 68 வது வயதில் இயற்கை எய்தினார்.சே.ப.நரசிம்மலு நாயுடு காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE