புதுடில்லி :டில்லியில் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின்கீழ் துணை ஜனாதிபதி மாளிகை கட்டப்பட உள்ள இடத்தில் இருந்து 396 மரங்கள் வோரோடு எடுக்கப்பட்டு வேறு பகுதிக்கு இடம் மாற்றப்பட உள்ளன.
மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ் டில்லியில் உள்ள ராஜபாதை மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இதனுடன் புதிய பார்லிமென்ட் கட்டடம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.துணை ஜனாதிபதிக்கான மாளிகை, பிரதமரின் அலுவலகம் மற்றும் இல்லம், பொது மத்திய தலைமை செயலகம் ஆகியவையும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின்கீழ் 16.38 ஏக்கர் பரப்பளவில் துணை ஜனாதிக்கான மாளிகையை கட்டமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி மாளிகை மற்றும் வடக்கு பிளாக் பிரிவில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அருகில் 214 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மாளிகை கட்டப்பட உள்ளது.
இந்த மாளிகை அமைய உள்ள இடத்தில் 717 மரங்கள் உள்ளன. அதில் 396 மரங்கள் வேரோடு எடுக்கப்பட்டு, வேறு பகுதிக்கு இடம் மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு டில்லி வனத் துறையும் அனுமதி அளித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE