தேவனஹள்ளி:-தேவனஹள்ளி 'பெஸ்காம்' எனப்படும் மின் அலுவலக வளாகத்தில் இருந்த 70 மரங்கள் இரவோடு, இரவாக வெட்டப்பட்டுள்ளதால், பசுமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளியில் பெஸ்காம் அலுவலகம் அமைந்துள்ளது. அலுவலக வளாகத்தில் நுாற்றுக்கணக்கான வானுயர்ந்த மரங்கள் இருந்தன.திடீரென இரவோடு இரவாக, 70 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மரங்கள் வெட்டுவதற்கு வனத்துறையின் அனுமதி அவசியம். ஆனால், பல ஆண்டுகளாக வளர்த்த மரங்கள் வெட்டப்பட்டிருப்பதால், பசுமை ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
பெஸ்காம் அதிகாரிகளே, மரங்கள் வெட்ட துணை போனதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரித்தால் சரியான காரணம் கூறாமல் மழுப்புகின்றனர்.சில மர வியாபாரிகளின் சூழ்ச்சியால் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அபிவிருத்தி என்ற பெயரில் ஏற்கனவே பல மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE