செய்திகள் சில வரிகளில்...இந்தியா

Added : ஜன 21, 2022 | |
Advertisement
வழக்கிலிருந்து நீதிபதி விலகல்புதுடில்லி: கோவா ஓட்டலில் உடன் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல பத்திரிகையாளரும், 'தெஹல்கா' பத்திரிகையில் முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பால் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிரான வழக்கை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரிக்கக் கோரிய அவரது மனுவை, கோவா உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. இதை
 செய்திகள் சில வரிகளில்...இந்தியா

வழக்கிலிருந்து நீதிபதி விலகல்
புதுடில்லி: கோவா ஓட்டலில் உடன் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல பத்திரிகையாளரும், 'தெஹல்கா' பத்திரிகையில் முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பால் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிரான வழக்கை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரிக்கக் கோரிய அவரது மனுவை, கோவா உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி நாகேஸ்வர ராவ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவா அரசு தரப்பில் இந்த வழக்கில் 2016ல் தான் ஆஜராகி இருப்பதால், மனுவை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி அறிவித்தார்.
போதை பொருட்கள் சிக்கின
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதியில் போதை பொருள் கடத்தப் படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வீரர்கள் நேற்று காலை நடத்திய சோதனையில், 31 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
நாய்கள் கடித்து சிறுமி பலி
தார்: மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டம் பாட்லியா கிராம பண்ணை வீட்டில், நேற்று முன்தினம் விளையாடிய 3 வயது சிறுமி நந்தினியை தெரு நாய்கள் கடித்தன. அவற்றை விரட்டிய பெற்றோர் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி சிறுமி பலியானார்.
சமூக வலைதளத்துக்கு முழுக்கு

கோல்கட்டா: மேற்கு வங்க திரிணமுல் காங்., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான மதன் மித்ரா, சமூக வலைதளங்களில் மக்களிடம் தொடர்ந்து உரையாடி வந்தார். இந்நிலையில, ஊடக உரையாடல்களில் இருந்து ஆறு மாதம் விலகி இருப்பதாக நேற்று அறிவித்தார். சமீபத்தில் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் அவர் கூறியதே இதற்கு காரணம் என தெரிகிறது.
ஆபாச கருத்து: 3 பேர் கைது
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக 'கிளப் ஹவுஸ்' செயலியில் ஆபாச கருத்து பதிவிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர். ஹரியானாவைச் சேர்ந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை, சிவசேனா ராஜ்யசபா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி பாராட்டி உள்ளார்.

ஹெலிகாப்டரில் மீட்பு
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை கடற்கரையில் இருந்து 275 கி.மீ., தொலைவில் ஜெர்மன் கடற்படை கப்பல் நிற்கிறது. இதிலிருந்த அதிகாரி ஒருவர் உடல் நலம் பாதிக்கப் பட்டார். ஜெர்மன் துாதரக கோரிக்கையை ஏற்று, நேற்று முன்தினம் நம் கடற்படையின் ஐ.என்.எஸ்., ஷிக்ரா ஹெலிகாப்டரில் அவர் அழைத்து வரப்பட்டு, மும்பை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீதிபதி மனு தள்ளுபடி
புதுடில்லி: 'நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக்கும் தேசிய நீதித்துறை அகாடமி பாடத் திட்டங்களின் குறைபாடுகளை நீக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மனு தாக்கல் செய்தார். மனுதாரரின் ஆலோசனைகளை அகாடமியிடம் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X