வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிட்னி: அணு ஆயுத வெடிப்பு ஏற்படுத்தும் பாதிப்பை தொங்கா எரிமலை உண்டாக்கி உள்ளதாக ஆஸி., மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
வட பசிபிக் கடற்பரப்பில் உள்ள 169 தீவுகளின் ஒருங்கிணைந்த நாடு தொங்கா. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அருகே உள்ள இந்த சிறிய தீவுகள் நிறைந்த நாட்டில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசித்து வருகின்றனர். பசிபிக் நெருப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த நாட்டில் அடிக்கடி எரிமலை வெடித்து வருகிறது.
சுனாமி, எரிமலை வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த சிறிய தீவுகளின் ஒன்றியம், சமீபத்தில் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்டவற்றில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் தொங்கா விரைந்தனர். சமீபத்தில் வெடித்த எரிமலையால் கிளம்பிய நச்சுப்புகை இந்தத் தீவில் உள்ள குடிநீர் ஆதாரங்களை கடுமையாக பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் பலர் குடிநீரின்றி தடுமாறும் நிலை ஏற்பட்டது.
ஐநா பேரிடர் மீட்பு ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் விச் கூறுகையில்
குடிநீர் தொட்டிகளில் எரிமலையில் நச்சுப்புகை கலந்ததால் தொங்கா மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் ஐநா., பேரிடர் மீட்பு குழு தற்போது எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய்ந்து முடித்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதுவரை மூவர் மரணம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
தொங்காடாப்பு தீவுக்கு தினமும் 75 ஆயிரம் லிட்டர் குடிநீர் கப்பல்களில் கொண்டு செல்லப்படுவதாகவும், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அணு ஆயுத வெடிப்பு ஏற்படுத்தும் பாதிப்பை ஒத்த பாதிப்பை தொங்கா எரிமலை வெடிப்பு ஏற்படுத்தியதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE