வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பணஜி: கோவா சட்டசபை தேர்தலில், மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கர் மகனுக்கு தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால், அவர் சுயேட்சையாக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவாவில் 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு அடுத்த மாதம் 14ல் தேர்தல் நடக்கிறது. , பா.ஜ., 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. கோவாவில் பா.ஜ., வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கர் 2019ல் காலமானார்.
இவர் பணஜி தொகுதி எம்.எல்,ஏ.,வாக 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தார். இவரது மகன் உத்பால், பணஜி தொகுதியில் போட்டியிட பா.ஜ., தலைமையிடம் வாய்ப்பு கேட்டார். தலைமை மறுத்ததால், பா.ஜ.விலிருந்து விலகினார்.
இந்நிலையில் தனது தந்தை போட்டியிட்டு வென்ற தொகுதியான பணஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உத்பால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE