சிவகங்கை:-''தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி தோல்வியை தழுவிவிட்டது. அதை மறைக்கத்தான் தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்து விமர்சித்து வருகின்றனர்,'' என சிவகங்கையில் பா.ஜ., தேசிய செயலாளர் (சிறுபான்மை பிரிவு) வேலுார் இப்ராகிம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,தமிழகத்தை ஆட்சி புரியும் தி.மு.க., அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாக இருந்து வருகிறது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000, நகை கடன் தள்ளுபடி, விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு, நீட் தேர்வு ரத்து, மதுக்கடைகள் மூடப்படும் என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
அதனால் தான் ஆட்சியில் அமர்ந்து 8 மாதங்களாகியும் ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை.200 ஹிந்து கோயில்கள் இடிப்புதி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் 200 க்கும் மேல் இடித்துவிட்டனர்.கடவுள் மீது நம்பிக்கை வைத்து வணங்கும் ஹிந்துக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கோயில்களை இடிப்பது கண்டிக்கத்தக்கது.
உண்மையான நிலையை மக்களுக்கு எடுத்து சொல்லாமல், தி.மு.க., ஆட்சியின் தோல்வியை மறைக்கவே மத்திய அரசை எதிர்க்கின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றால் மட்டுமே தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வசதி சென்று சேரும்.
'நீட்' விதிவிலக்கு சாத்தியமில்லை
மருத்துவ படிப்பிற்கென 'நீட்' தேர்வு என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. தமிழகத்திற்கு மட்டும் இதில் விதிவிலக்கு பெறுவது சாத்தியமில்லை என பல முறை தெரியபடுத்திவிட்டனர். ஆனால் அதற்கு பின்னரும் தி.மு.க., வெற்றி பெற்றால் 'நீட்' தேர்வை ரத்து செய்துவிடுவோம் என பொய் வாக்குறுதி தந்து, தமிழக மக்களை ஏமாற்றுகின்றனர். 'நீட்' தேர்வுக்கு பின்னர் தான் தமிழக ஏழை மாணவர்கள் ஆயிரக்கணக்கில் மருத்துவ படிப்பில் சேர்க்கை செய்துள்ளனர், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE