இது உங்கள் இடம்: ஏன் இவ்வளவு ஆர்வம்

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 22, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்எஸ்.பாரதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே... காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...' என்று, ஒரு பழைய பாடல் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வும், மாநில தேர்தல் ஆணையமும், பிற அரசியல் கட்சிகளும், அந்த




உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்




latest tamil news


எஸ்.பாரதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே... காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...' என்று, ஒரு பழைய பாடல் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வும், மாநில தேர்தல் ஆணையமும், பிற அரசியல் கட்சிகளும், அந்த பாட்டின், 'டியூனு'க்கேற்பத் தான் நடனமாடுகின்றன.

கொரோனா தொற்று பரவல் குறைந்தபாடில்லை. அது சுற்று ஒன்று, இரண்டு என்று வலம் வந்து, தற்போது, 'ஒமைக்ரான்' என மூன்றாவது சுற்றில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவிய நாள் முதல், இந்தியாவில் இதுவரை, 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பர் என்று, அமெரிக்க புள்ளி விபர நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


latest tamil news


தமிழகத்தில், 2020 செப்., 30ம் தேதி வரை, ஆறு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவிக் கொண்டிருந்த போது, சட்டசபைத் தேர்தலை நடத்தியதே மாபெரும் தவறு. சட்டசபையை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தி, தொற்று பரவல் குறைந்த பின், தேர்தலை நடத்தி இருக்கலாம்; ஆனால் செய்யவில்லை.

சட்டசபைக்கான தேர்தலை, கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போதே தேர்தல் ஆணையம் நடத்தி முடித்து விட்டது.அதனால் ஆணையம் கண்ட பலன் தான் என்ன? தற்போது மாநில தேர்தல் ஆணையத்தின், 'டர்ன்!''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம்' என்று, மாநில தேர்தல் ஆணையம் ஒற்றைக்காலில் பிடிவாதம் பிடித்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், நாட்டில் என்ன நிர்வாகம் ஸ்தம்பித்து நிலைகுலைந்து நிற்கிறது? திட்டப்பணிகளில் அரசியல் கட்சிகளுக்கும், அதன் பிரதிநிதிகளுக்கும், 'கமிஷன்' சென்று சேராமல், அதிகாரிகள் மட்டத்திலேயே பங்கு பிரித்துக் கொள்ளப்படுகிறது. அது பொறுக்க மாட்டாமல் அரசியல்வாதிகள், 'உள்ளாட்சி தேர்தல்' என்று, கூப்பாடு போடுகின்றனர்.

மாநில தேர்தல் ஆணையமும் அந்த இசைக்கேற்ப, தாளம் விலகாமல் நடனமாடுகிறது. கொரோனா முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து விலகும் வரை, அந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைப்பதால், குடியா முழுகி விடப் போகிறது?

அதை செய்யாமல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதிலேயே ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஏன் ஆர்வமாய் உள்ளன? மக்கள் சேவையாவது, மண்ணாங்கட்டியாவது! எல்லாம், 'கலெக் ஷன், கமிஷன், கரெப்ஷன்' என்ற கொள்கைக்காகத் தான்!

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-202220:58:12 IST Report Abuse
kulandai kannan இப்போது உள்ளாட்சித் தேர்தலை அனுமதிக்கும் நீதிமன்றங்கள், பின்னர் கொரோனா தீவிரமானால் தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுக்கும்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
22-ஜன-202219:24:09 IST Report Abuse
Soumya தமிழ்நாட்டின் கொரோனா பரவலுக்கு விடியலும் மூர்க்க கூட்டமும் தான் காரணம்
Rate this:
Cancel
22-ஜன-202219:23:17 IST Report Abuse
துஸ்மந்தா சிங்கா ராய் ////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X