உ.பி., தேர்தலில் காங்., முதல்வர் வேட்பாளர்... பிரியங்கா?  சூசகமாக தன்னைத் தானே அறிவித்தார்

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 22, 2022 | கருத்துகள் (17)
Advertisement
புதுடில்லி : உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக தன்னைத் தானே சூசகமாக அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா அறிவித்துள்ளார். 'உ.பி.,யில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்' என கேட்கப்பட்டதற்கு, ''எல்லா இடங்களிலும் என் முகத்தைத் தான் பார்க்கிறீர்கள். காங்கிரசின் வேறு யாருடைய முகத்தையாவது பார்க்கிறீர்களா,'' என பிரியங்கா பதில்
உ.பி., தேர்தல், முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?

புதுடில்லி : உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக தன்னைத் தானே சூசகமாக அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா அறிவித்துள்ளார். 'உ.பி.,யில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்' என கேட்கப்பட்டதற்கு, ''எல்லா இடங்களிலும் என் முகத்தைத் தான் பார்க்கிறீர்கள். காங்கிரசின் வேறு யாருடைய முகத்தையாவது பார்க்கிறீர்களா,'' என பிரியங்கா பதில் அளித்தார்.


முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. இங்கு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
உ.பி.,யில் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரசுக்காக அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


latest tamil news


இந்நிலையில் உ.பி., சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதை காங்., - எம்.பி., ராகுலும், பிரியங்காவும் இணைந்து வெளியிட்டனர். அந்த அறிக்கையில், 'ஸ்டார்ட் அப் நிதியாக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்; போலீஸ் துறையில் ஒரு லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். 1.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்' என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுஉள்ளன.


இதைத் தொடர்ந்து ராகுல் கூறியதாவது: இந்த அறிக்கை வெற்று வார்த்தை கிடையாது. இளைஞர்களுடன் ஆலோசித்து அவர்களது கருத்து இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உ.பி., இளைஞர்களுக்கு புதிய கொள்கை தேவைப்படுகிறது. புதிய கொள்கையை காங்கிரசால் மட்டுமே தர முடியும். நாங்கள் மக்களை பிரிக்கவில்லை; ஒற்றுமை படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பிரியங்கா கூறுகையில், ''மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வளர்ச்சியில் கவனம் செலுத்த மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது,'' என்றார்.

பிரியங்காவிடம் நிருபர்கள், 'உ.பி.,யில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார்' என கேட்டனர். அதற்கு பிரியங்கா, ''உத்தர பிரதேச காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேறு யாருடைய முகமாவது உங்களுக்கு தென்படுகிறதா; பிறகு என்ன,'' என பதில் அளித்தார்.'அப்படியானால் நீங்கள் தான் காங்கிரசின் முதல்வர் வேட்பாளரா' என நிருபர்கள் கேட்க, ''ஒவ்வொரு இடத்திலும் என் முகம் இருப்பதை நீங்கள் காணலாம்,'' என பிரியங்கா சூசகமாக கூறினார். 'தேர்தலில் போட்டியிடுவீர்களா' என கேட்டதற்கு, ''சட்டசபை தேர்தலில் களமிறங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்த பின் வெளிப்படையாக அறிவிப்பேன்,'' என பதில் அளித்தார்.
தேர்தல் 'ஹைலைட்ஸ்'* உ.பி., யில் கைரானா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ., நஹீத் ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்


* இதே தொகுதியில் நஹீத் ஹாசனின் சகோதரி இக்ரா ஹாசன் சுயேச்சையாக போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்தார்* முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தரகண்டில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 59 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ., அறி வித்துள்ளது. இதில் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது* பா.ஜ.,விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட உத்தரகண்ட் முன்னாள் அமைச்சர் ஹரக் சிங் ராவத் மற்றும் அவரது மருமகள் அனுக்கிருதி ஆகியோர் காங்கிரசில் நேற்று இணைந்தனர்* முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ., நேற்று அறிவித்தது* கோவா சட்டசபை தேர்தலில் பணஜி தொகுதியில் போட்டியிட பா.ஜ., சார்பில் வாய்ப்பு அளிக்கப்படாததை அடுத்து, அக்கட்சியில் இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கரின் மகன் உத்பால் பரீக்கர் நேற்று விலகினார்* உத்தர பிரதேசத்தின் கெரகர்க் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.,வின் மூத்த தலைவர் திகம்பர் சிங் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். பின், கட்சியின் சில மூத்த தலைவர்கள் தனக்கு துரோகம் செய்து விட்டதால் களம் இறங்கி இருப்பதாகவும், வெற்றி பெற்றால் யோகி ஆதித்யநாத்துக்கே ஆதரவாக செயல்பட இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.


மருமகளுக்கு முலாயம் ஆசி


சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் மகன் பிரதீபின் மனைவி அபர்ணா பா.ஜ.,வில் நேற்று முன்தினம் இணைந்தார். டில்லியிலிருந்து உ.பி., தலைநகர் லக்னோவுக்கு நேற்று திரும்பிய அபர்ணா, தன் மாமனார் முலாயம் சிங்கிடம் ஆசி பெற்றார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
22-ஜன-202213:27:45 IST Report Abuse
M  Ramachandran நரியின் திராட்சையை பழ போல் ஆசை யாரை விட்டது பிரதம மந்திரி ஆசை நிறைவேராததால் இததாவது கிடைத்தால் கொஞ்சம் பந்தாவோடு திரியலாம்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
22-ஜன-202213:24:31 IST Report Abuse
Suppan இந்த அம்மணிக்கு பிணைத்தொகையாவது கிடைக்குமா? அதற்குள் முதல்வர் ஆசை வேறு. எல்லோருக்கும் கனவு காண உரிமை உண்டு.
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
22-ஜன-202212:08:46 IST Report Abuse
suresh kumar //''சட்டசபை தேர்தலில் களமிறங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்த பின் வெளிப்படையாக அறிவிப்பேன்,'' என பதில் அளித்தார்.// வேறு வகையில் முதலமைச்சர் ஆவாரோ? ஆனபின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்துக் கொள்வாராயிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X