தேர்தல் வழக்குகள் : மாநில தேர்தல் கமிஷனர் ஆலோசனை

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 22, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை :நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்து மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 158 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.கொரோனா தொற்று பரவும் நிலையில்
தேர்தல் ,வழக்குகள் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை :நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்து மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 158 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவும் நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் வழங்கிய கெடு ஜன. 26ம் தேதியுடன் முடிகிறது. இதனால் மாநில தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்து மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் செயலர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் சட்ட வல்லுனர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 24ம்தேதி நடக்கவுள்ளது. அப்போது எடுத்துரைக்க வேண்டிய வாதங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது.வழக்கின் முடிவை அறிந்து தேர்தல் அறிவிப்பை வெளியிட கமிஷன் திட்டமிட்டுள்ளது. எனவே இன்று தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
22-ஜன-202203:23:30 IST Report Abuse
BASKAR TETCHANA பழனிகுமாருக்கும் சுந்தரவல்லிக்கும் இந்நேரம் ஸ்டாலின் வீட்டில் விருந்து வைத்து குளிப்பாட்டி இருப்பார்கள். எதற்கு தி.மு.க காரன் மீது வழக்குகள் எதுவும் இருந்தால் எல்லாம் தள்ளுபடி பண்ணத்தான். பேசாமல் இந்த தேர்தலை டெல்லியில் உள்ள யாராவது ஒரு அதிகாரி நடத்தலாமே. அப்போது தான் தி.மு.க காரன் பாச்சா பலிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X