சென்னை பல்கலை தேர்வு முறைகேடு உண்மை கண்டறிய குழு நியமனம்

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 22, 2022 | கருத்துகள் (6)
Advertisement
சென்னை : சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி படிப்பில் சேராத 117 பேர், ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வை எழுதி, முறைகேடாக பட்டம் பெற முயன்றது குறித்து விசாரணை நடத்த, ஐந்து பேர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலையில் 2020 டிசம்பரில் ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இதில், தொலைநிலை கல்வி சார்பில், தேர்வு எழுதியவர்களுக்கு சிறப்பு சலுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி படிப்பில் சேராத 117 பேர், ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வை எழுதி, முறைகேடாக பட்டம் பெற முயன்றது குறித்து விசாரணை நடத்த, ஐந்து பேர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.



latest tamil news



சென்னை பல்கலையில் 2020 டிசம்பரில் ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இதில், தொலைநிலை கல்வி சார்பில், தேர்வு எழுதியவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது.போலி பெயர் பதிவுஅதாவது, 1980 - -81ம் கல்வியாண்டு முதல் தற்போது வரை சென்னை பல்கலையில் படித்து, சில பாடங்களில் தேர்ச்சி பெறாத அனைவரும், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதலாம் என அனுமதி வழங்கப்பட்டது.


latest tamil news


இதன்படி, ஏராளமானோர் தேர்வு எழுதியதில், அவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தேர்ச்சி பட்டியலை சென்னை பல்கலையின் தேர்வு துறை தயாரித்தது. அப்போது சிலர், இந்த செமஸ்டர் தேர்வில் தான், அவர்களது படிப்புக்கான அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, பல்கலை நிர்வாகம் நடத்திய விசாரணையில், 117 பேர் எந்த ஆண்டிலும் படிப்பில் சேராமல், நேரடியாக ஆன்லைன் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் போல விண்ணப்பித்ததுடன், ஒரே தேர்வில் தேர்ச்சி பெற்று, குறுக்கு வழியில் பட்டம் பெற முயன்றதும் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக, பல்கலை ஊழியர்கள் சிலருக்கு, தலா மூன்று லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து, தங்கள் பெயர்களை போலியாக பதிவு செய்ததும் தெரியவந்தது. அதனால், 117 பேரின் தேர்வு முடிவுகளையும் நிறுத்தி வைக்க, துணைவேந்தர் கவுரி உத்தரவிட்டார்.

முதற்கட்ட விசாரணையும் நடத்தப்பட்டது.இந்நிலையில், தேர்வு முறைகேடு குறித்து விசாரித்து, உண்மை நிலையை அறிய, தமிழக சட்டப்படிப்புகள் துறை இயக்குனர் சொக்கலிங்கம் தலைமையில் விசாரணை குழு அமைத்து, பல்கலை துணைவேந்தர் கவுரி உத்தரவிட்டுள்ளார்.


விசாரணை



இந்தக் குழுவில், சென்னை பல்கலையின் சட்டப்படிப்பு துறை தலைவர் வேணுகோபால்; ஹிந்தி துறை தலைவர் சிட்டி அன்னபூர்ணா; பொருள் அளவியல் துறை இணை பேராசிரியர் சத்தியவான் மற்றும் பயோகெமிஸ்ட்ரி பேராசிரியர் இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர், தேர்வுத்துறை அதிகாரிகள், தொலைநிலை கல்வி அதிகாரிகள், பிரிவு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் முறைகேடாக தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கியவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
22-ஜன-202217:59:30 IST Report Abuse
கல்யாணராமன் சு. இவங்க சொல்படி 3 லட்சம் வாங்கி பொய்யா சேத்துவிட்ட அந்த பல்கலை ஊழியர்களை பணி நீக்கம் (பணி இடை நீக்கம் இல்லை) செய்யவேண்டும் ..........
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
22-ஜன-202217:58:11 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்த 117 பேருல எத்தனை MLA க்கள், மந்திரிகள் இருக்காங்களோ ??
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஜன-202211:34:59 IST Report Abuse
Lion Drsekar எதுவுமே வேண்டாம் சுதந்திரம் பெற்றது முதல் எல்லா ஆவணங்களையும் சரிபார்த்தல் பல அதிர்ச்சிக்குள்ளான செய்திகள் வெளிவரும், ஒரு வேலை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் பல லட்சம் கோடிக்கு அதிபதி, கைகளால் எழுதி வழங்கப்பட்ட சான்றிதழ்களில் எழுத்துக்களை மாற்றியமைத்தல் , , கணினி வந்த பிறகு மிகவம் எளிதாக மாற்றியமைத்தது, எதுவுமே தெரியாதவர்களுக்கு வலுவில் பல்கலைக்கழகமே நேரில் வந்து முக்கிய பிரமுகர்கள் இல்லங்கள் தேடி வந்து .... கொடுத்தது ? அவரவர் மனசாட்சிக்கு தெரியும், யார் யார் எந்த எந்த நிலைகளில் தவறு செய்தார்கள், எப்படியெல்லாம் அதை வைத்துக்கொண்டு பல பதவிகள் அனுபவித்தார்கள் என்று ? இந்த செய்தியையும் வேண்டும் என்றே திருத்து கூறுவதாக நினைத்தால் ஆன்லைனுக்கு முன்பு நடந்த தேர்வு விடைத்தாள்களை பொதுமக்கள் அல்லது படித்தவர்களிடம் கொடுத்து அந்த விடைத்தாள்களை உரிய மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க செய்யங்கள், பிறகு பாருங்கள் . நான் சொல்வது உண்மை சத்தியம், அதே போன்று தேர்வு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படுகிறது என்பதையும் உலகுக்கு தெரியப் படுத்தவேண்டும், யார் ஆணையிடுகிறார், தேர்வாகாத நிலையில் இருப்பவர்கள் எப்படி தெரிகிறார்கள் என்று தேறியவர்களுக்கு தெரியாது அதுதான் உண்மையான கல்வி நிலை, இதற்க்கு மேல் உண்மையைக் கூறினால் எதிர்மறை கருத்து பதிவு செய்பவரின் என்ற குற்றத்துக்கு ஆளாகவேண்டிய ஒரு நிலைவேறு, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X