போகி பண்டிகையால் காற்றில் மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Added : ஜன 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில், போகி கொண்டாட்டத்தால், காற்றில் மாசு பல மடங்காக அதிகரித்துள்ளது, மாசு கட்டுப்பாட்டு குழும ஆய்வில் தெரிய வந்துள்ளது.புதுச்சேரியில் பெருகி வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகையினால் காற்று மாசுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கன மீட்டர் காற்றில் இயல்பாக பி.எம்.,-10 எனப்படும் மிதக்கும்
 போகி பண்டிகையால் காற்றில் மாசு  அதிகரிப்பு...  சுற்றுச்சூழல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்



புதுச்சேரி : புதுச்சேரியில், போகி கொண்டாட்டத்தால், காற்றில் மாசு பல மடங்காக அதிகரித்துள்ளது, மாசு கட்டுப்பாட்டு குழும ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரியில் பெருகி வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகையினால் காற்று மாசுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கன மீட்டர் காற்றில் இயல்பாக பி.எம்.,-10 எனப்படும் மிதக்கும் நுண்துகள்கள் 100 மைக்ரோ கிராம், சல்பர் டை ஆக்சைடு - 80 மைக்ரோ கிராம், நைட்ரஜன் டை ஆக்சைடு -80 மைக்ரோ கிராம் வரை இருக்கலாம்.

இது மனிதர்கள் சுவாசிக்க உகந்தது. இதன் அளவு கூடினால் காற்றில் மாசுபாடு அதிகரித்து, பல்வேறு சுவாச பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.இதனை தவிர்க்க, சுற்றுச் சூழல் துறையின் மாசு கட்டுப்பாட்டு குழுமம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு நடத்தி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11 மற்றும் 13ம் தேதிகளில் மாசுக்கட்டுபாட்டு குழும அதிகாரிகள், புதுச்சேரி அண்ணா நகர், மேட்டுப்பாளையம், காரைக்கால் கோவில்பத்து ஆகிய மூன்று இடங்களில் ஆய்வு நடத்தினர்.இதன் முடிவுகள் தற்போது துறைக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி எடுக்கப்பட்ட ஆய்வில் ஒரு கனமீட்டர் காற்றில் பி.எம்.,-10 மிதக்கும் நுண்துகள் அண்ணா நகரில் 19 மைக்ரோ கிராம், மேட்டுப்பாளையம்-60 மைக்ரோ கிராம், காரைக்கால் கோவில்பத்து - 26 மைக்ரோ கிராம் பதிவாகி இருந்தது.

ஆனால் போகி பண்டிகையன்று பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் காற்றில் நுண்துகள்களில், அண்ணா நகர்-101 மைக்ரோ கிராம், மேட்டுப்பாளையம்-189 மைக்ரோ கிராம், காரைக்கால் கோவில்பத்து-53 மைக்ரோகிராம் வரை பதிவாகி இருந்தது.அதாவது கடந்தாண்டினை ஒப்பிடும்போது மேட்டுப்பாளையத்தில்-73.4 சதவீதம், காரைக்காலில் கோவில்பத்து-39.5 சதவீதம் அதிகரித்து இருந்தது. அண்ணா நகரில் கடந்தாண்டைவிட 1.9 சதவீதம் குறைந்திருந்தது.இதர நச்சு வாயுக்கள்:போகி பண்டிகை அன்று அண்ணா நகரில் ஒரு கனமீட்டர் காற்றில் நைட்ரஜன் ஆக்சைடு 22.4 மைக்ரோ கிராம், சல்பர் டை ஆக்சைடு-17.1 மைக்ரோகிராம் பதிவாகி இருந்தது.

இதேபோல் மேட்டுப்பாளையத்தில் ஒரு கனமீட்டர் காற்றில் நைட்ரஜன் ஆக்சைடு 20.9 மைக்ரோ கிராம், சல்பர் டை ஆக்சைடு-14.5 மைக்ரோ கிராம் பதிவாகி இருந்தது. இதேபோன்று காரைக்கால் கோவில்பத்து பகுதியில் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள் நிர்ணமிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே இருந்தது.

இது மனிதர்கள் சுவாசிக்க கூடிய அளவில் கட்டுக்குள் இருந்த போதிலும், கடந்த 11ம் தேதியுடன் ஒப்பிடுகையில் அதிகமே.மறு சுழற்சிக்கு அனுப்பலாமே:மாசுகட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நமது முன்னோர்கள், பொங்கல் பண்டிகைக்கு முன் வீடுகளை சுத்தம் செய்து, தேவையற்ற இயற்கை சார்ந்த பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடினர்.

தற்போது போகி பண்டிகையில் மக்கா தன்மை கொண்ட பிளாஸ்டிக், செயற்கை இழை துணிகள், ரப்பர் பொருட்கள், டயர், டியூப் மற்றும் ரசாயண பொருட்களை எரிக்கின்றனர். இதனால், காற்று மாசுபடுவதோடு, வெளியேறும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைகின்றனர்.அதனால், பிளாஸ்டிக் உள்ளிட்ட ரசாயண பொருட்களை எரிக்காமல் மறு சூழற்சிக்கு அனுப்புவதன் மூலம் காற்று மண்டலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கலாம்' என்றனர்.

மறு சுழற்சிக்கு அனுப்பலாமே:மாசுகட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நமது முன்னோர்கள், பொங்கல் பண்டிகைக்கு முன் வீடுகளை சுத்தம் செய்து, தேவையற்ற இயற்கை சார்ந்த பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடினர்

.தற்போது போகி பண்டிகையில் மக்கா தன்மை கொண்ட பிளாஸ்டிக், செயற்கை இழை துணிகள், ரப்பர் பொருட்கள், டயர், டியூப் மற்றும் ரசாயண பொருட்களை எரிக்கின்றனர். இதனால், காற்று மாசுபடுவதோடு, வெளியேறும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைகின்றனர்.அதனால், பிளாஸ்டிக் உள்ளிட்ட ரசாயண பொருட்களை எரிக்காமல் மறு சூழற்சிக்கு அனுப்புவதன் மூலம் காற்று மண்டலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X