மின்சார வர்த்தக வாகன தயாரிப்பில் இறங்கும் அதானி

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 22, 2022 | கருத்துகள் (16)
Advertisement
புதுடில்லி : துறைமுகங்கள், விமான நிலையங்கள், உருக்கு வணிகம் என பல துறைகளில் கால் பதித்து வரும் அதானி குழுமம், அடுத்த கட்டமாக, மின்சார வாகன தயாரிப்பிலும் களம் இறங்குகிறது. குறிப்பாக, மின்சார வர்த்தக வாகன பிரிவில் இறங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனமான, 'எஸ்.பி., டிரஸ்ட்', அதானி எனும் டிரேட்மார்க்கை, தரை மற்றும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி : துறைமுகங்கள், விமான நிலையங்கள், உருக்கு வணிகம் என பல துறைகளில் கால் பதித்து வரும் அதானி குழுமம், அடுத்த கட்டமாக, மின்சார வாகன தயாரிப்பிலும் களம் இறங்குகிறது.



latest tamil news



குறிப்பாக, மின்சார வர்த்தக வாகன பிரிவில் இறங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனமான, 'எஸ்.பி., டிரஸ்ட்', அதானி எனும் டிரேட்மார்க்கை, தரை மற்றும் கடல் வாகனங்களுக்காக பயன்படுத்தும் அனுமதியை பெற்றுள்ளது.

அதானி குழுமம், அதன் பசுமை திட்டங்களை விரிவுபடுத்தும் முயற்சியில் ஒரு பகுதியாக, மின்சார வாகன தயாரிப்பிலும் இறங்குவதாக தெரியவந்துள்ளது.முதல் கட்டமாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றுக்குள் பயன்படுத்தும் வகையிலான பஸ், டிரக் போன்றவற்றை தயாரிக்கும் முயற்சியில் இந்நிறுவனம் இறங்க உள்ளது.


latest tamil news



அத்துடன், மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிப்பது மற்றும் சார்ஜிங் நிலையங்களை அமைப்பது போன்ற முடிவிலும் இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், குஜாராத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில், மின்சார வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துஉள்ளது.

ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகன பிரிவில் இறங்கியதை அடுத்து, போட்டி நிறுவனமான அதானியும் களம் இறங்குகிறது.இருப்பினும், இது குறித்து அதானி குழுமத்திடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
22-ஜன-202220:39:47 IST Report Abuse
elakkumanan ஏம்பா, இப்பிடியே கார்பொரேட் கம்பெனிகளுக்கே எல்லாத்தையும் கொடுத்தா, நம்ப ஊரில் கொஞ்சத்துக்கு கொஞ்சமா ஒரு இருபது டிவி சானல், ஏரோபிளான் கம்பெனி, கம்பெனி @ கட்சி, சாராய தொழில் வல்லுநர்கள் , ஸ்டிக்கர் தயாரிப்பு நிறுவனம் முதலியன அடங்கிய சிறு குறு சின்னஞ்சிறு குடிசை தொழில் நிறுவன அடிமைகள் ஒப்பாரி பலமாக இருக்குமே....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
22-ஜன-202218:30:24 IST Report Abuse
M  Ramachandran வியாபாரி. ஆதாயமில்லாமல் ஆத்தோடு போவான செட்டி.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
22-ஜன-202213:21:46 IST Report Abuse
Tamilan ஏற்கனவே தயாரிப்பவர்களை அடித்து ஓரம் கட்டிவிட்டு இவர்கள் செய்யப்போகிறார்கள் .
Rate this:
22-ஜன-202217:05:41 IST Report Abuse
ஆரூர் ரங்காங்கிரஸ் க்கு வேண்டப்பட்ட அம்பாசடர் ( பிர்லா) பிரீமியர் பத்மினி ( வாவ்சந்த்நதர்) தவிர மற்றவர்களுக்கு கார் தயாரிக்கும் லைசென்ஸை 50 ஆண்டுகள் மறுத்து வைத்திருந்தது காங் ஆட்சி😛. பின்னர் இந்திரா குடும்ப மாருதி க்கு மட்டும் லைசென்ஸ். அது ஒரே ஒரு கார் கூட தயாரிக்க வில்லை. ஆனால் அதற்கு ஆறு கோடி இழப்பீடு கொடுத்து அரசுடைமை ஆக்கினார் இந்திரா. பின்னர் அதனையும் கொஞ்ச கொஞ்ச மாக சுசுகியிடம் விற்றனர். இப்போ உள்ளூர் காரர் அதானி தயாரித்தால் எரிகிறது? ஓ அவர் நேரு🤔 குடும்ப ஆளில்லை...
Rate this:
22-ஜன-202217:05:52 IST Report Abuse
ஆரூர் ரங்காங்கிரஸ் க்கு வேண்டப்பட்ட அம்பாசடர் ( பிர்லா) பிரீமியர் பத்மினி ( வாவ்சந்த்நதர்) தவிர மற்றவர்களுக்கு கார் தயாரிக்கும் லைசென்ஸை 50 ஆண்டுகள் மறுத்து வைத்திருந்தது காங் ஆட்சி😛. பின்னர் இந்திரா குடும்ப மாருதி க்கு மட்டும் லைசென்ஸ். அது ஒரே ஒரு கார் கூட தயாரிக்க வில்லை. ஆனால் அதற்கு ஆறு கோடி இழப்பீடு கொடுத்து அரசுடைமை ஆக்கினார் இந்திரா. பின்னர் அதனையும் கொஞ்ச கொஞ்ச மாக சுசுகியிடம் விற்றனர். இப்போ உள்ளூர்காரர் அதானி தயாரித்தால் எரிகிறது? ஓ அவர் நேரு🤔 குடும்ப ஆளில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X