வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : துறைமுகங்கள், விமான நிலையங்கள், உருக்கு வணிகம் என பல துறைகளில் கால் பதித்து வரும் அதானி குழுமம், அடுத்த கட்டமாக, மின்சார வாகன தயாரிப்பிலும் களம் இறங்குகிறது.
![]()
|
குறிப்பாக, மின்சார வர்த்தக வாகன பிரிவில் இறங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனமான, 'எஸ்.பி., டிரஸ்ட்', அதானி எனும் டிரேட்மார்க்கை, தரை மற்றும் கடல் வாகனங்களுக்காக பயன்படுத்தும் அனுமதியை பெற்றுள்ளது.
அதானி குழுமம், அதன் பசுமை திட்டங்களை விரிவுபடுத்தும் முயற்சியில் ஒரு பகுதியாக, மின்சார வாகன தயாரிப்பிலும் இறங்குவதாக தெரியவந்துள்ளது.முதல் கட்டமாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றுக்குள் பயன்படுத்தும் வகையிலான பஸ், டிரக் போன்றவற்றை தயாரிக்கும் முயற்சியில் இந்நிறுவனம் இறங்க உள்ளது.
![]()
|
அத்துடன், மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிப்பது மற்றும் சார்ஜிங் நிலையங்களை அமைப்பது போன்ற முடிவிலும் இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், குஜாராத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில், மின்சார வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துஉள்ளது.
ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகன பிரிவில் இறங்கியதை அடுத்து, போட்டி நிறுவனமான அதானியும் களம் இறங்குகிறது.இருப்பினும், இது குறித்து அதானி குழுமத்திடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement