அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்படும் பாலம் இடிந்தது

Updated : ஜன 22, 2022 | Added : ஜன 22, 2022 | கருத்துகள் (22)
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் நேற்று(ஜன.,21) நள்ளிரிவு திடீரென கிரேன் மூலம் துாணை இணைக்கும் போது இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர்.தஞ்சாவூர்- விக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் துாரத்திற்கு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் நேற்று(ஜன.,21) நள்ளிரிவு திடீரென கிரேன் மூலம் துாணை இணைக்கும் போது இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர்.latest tamil news


தஞ்சாவூர்- விக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் துாரத்திற்கு, நான்கு வழி சாலையாக மாற்றும் பணி, கடந்த 2017-ம் ஆண்டு 3.517 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு 3 பிரிவுகளாக, கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது.

முதல் பிரிவில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கெடிலம், தென்பெண்ணை உட்பட 26 ஆற்றுப்பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள் ,3 ரயில்வே மேம்பாலங்கள் , 2 கனரக வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.


latest tamil news2-வது பிரிவில் சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 34 ஆற்றுப்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜெயங்கொண்டம், கூட்டுரோடு ,மீன் சுருட்டி, குமாரக்குடி உட்பட 23 இடங்களில் மேம்பாலங்களும் ,ஒரு சுங்கச்சாவடியும் கட்டப்பட்டு வருகின்றன.

3-வது பிரிவில் சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காவிரி, வெண்ணாறு ,வடவாறு உள்ளிட்ட 22 இடங்களில் ஆற்றுப்பாலங்கள் ,தாராசுரத்தில் ரயில்வே மேம்பாலம் ,வளையபேட்டை ,ராஜகிரி ,திருக்கருகாவூர் உள்ளிட்ட 20 இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.


latest tamil newsபாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள கோபுராஜபுரம் , மேலசெம்மங்குடி ,பொன்மான் மேய்ந்த நல்லூர் ,சூலமங்கலம் ,புறக்குடி, வடக்குமாங்குடி ,அருள்மொழிபேட்டை ,வையச்சேரி ,உதாரமங்கலம் ,அகரமாங்குடி ,அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தற்போது 4 வழி சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை - அரியலுார் மாவட்டத்தை இணைக்கும் சுமார் 1.5 கிலோ மீட்டர் துாரம் உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், 150 கோடி ரூபாயில் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 5 மற்றும் 6வது துாண்களை இணைக்கும் வகையில் நேற்று கான்கிரீட் போட்டுள்ளனர். இந்த கான்கிரீட் நேற்று இரவு இடிந்து விழுந்துள்ளது. கிட்டத்தட்ட சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.


latest tamil newsஇது குறித்து கட்டுமான நிறுவனத்தினர் கூறுகையில்; 15 தொழிலாளர்கள் பாலத்தை இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 12 அடி அகலம் 50 மீட்டர் நீளமுள்ள ராட்சத பாலத்தை ஸ்டன் ஜாக்கி கிரேன் மூலம் தூக்கி தூண்கள் மீது வைப்பதற்காக கொண்டு சென்ற போது பாலத்தின் பாரம் தாங்காமல் கிரேட் கம்பி அறுந்து பாலம் கீழே விழுந்தது. தொழிலாளர்கள் தண்ணீரில் குதித்து விட்டதால், உயிர் சேதம் எதுவும் இல்லை. இதில் புதிதாக கட்டப்பட்ட துாண்களும் மற்றும் பாலமும் சிறியளவில் இடிந்து சேதம் அடைந்ததுள்ளது என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-ஜன-202204:34:02 IST Report Abuse
NicoleThomson அது சரி ஏற்கனவே கங்கைகொண்ட சோழபுரம் கோவில் பக்கத்தில் சாலை சென்று கொண்டிருந்தது இப்போ பெருசு வேற பண்றங்களா? அந்த கோவிலை சிதைக்காம விடமாட்டானுங்க போல
Rate this:
Cancel
22-ஜன-202221:43:26 IST Report Abuse
அப்புசாமி சித்தாளுக்கெல்லாம் இஞ்சினீயர் வேலை குடுத்துட்டாங்க.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-ஜன-202219:17:15 IST Report Abuse
D.Ambujavalli இந்தப் பாலம் கட்டி முடிந்து திறப்பு விழா அன்றே இடிந்து மானத்தை வாங்கியிருக்கும் அட…. மானம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் கமிஷன், கலெக் ஷன் எல்லாம் எப்படிக் குவிப்பது? திருப்பிக் கட்ட இன்னும் சில கோடிகள் மாநிலம் திவால்தான்
Rate this:
22-ஜன-202221:10:44 IST Report Abuse
E Mariappanநீங்க தமிழக அரசு திட்டம் என்று நினைத்து உளறுகிறீர்கள். இது மத்திய அரசின் திட்டம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X