மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அதிமுக சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழியில் தாலுகா அலுவலகம் முன்பு அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ பாரதி தலைமையிலும், குத்தாலத்தில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் செல்லையன் தலைமையிலும், தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 தாலுகாவில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோட்டக்கல் எழுப்பினர்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தூக்கணாங் குளம் பகுதியை சேர்ந்த நகர துணை செயலாளர் கஸ்தூரி என்பவர் மயக்கம் அடைந்தார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE