அரசுக்கு எதிராக அவதுாறு பரப்பிய சமூக வலைதளங்கள் முடக்கம்

Added : ஜன 22, 2022 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி: அரசுக்கு எதிரான பொய் செய்திகளை பரப்பிய சமூக வலைத்தளமான 'யு டியூப்'பில் 35 சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் யு டியூப்பின் சில சேனல்கள், ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டுள்ளன. இந்த சேனல்கள்

புதுடில்லி: அரசுக்கு எதிரான பொய் செய்திகளை பரப்பிய சமூக வலைத்தளமான 'யு டியூப்'பில் 35 சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் யு டியூப்பின் சில சேனல்கள், ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டுள்ளன. இந்த சேனல்கள் வாயிலாக இந்தியாவுக்கு எதிரான அவதூறான தகவல்கள் பரப்பி விடப்பட்டன. அதேபோல் இரண்டு இணையதளங்கள், 'டுவிட்டர்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' ஆகியவற்றில் தலா இரண்டு கணக்குகள், 'பேஸ்புக்'கில் ஒரு கணக்கு ஆகியவற்றை தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இதற்கான உத்தரவுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனித்தனியாக பிறப்பித்துள்ளது.சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களை இந்திய புலனாய்வு அமைப்புகள் கூர்ந்து கண்காணித்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-ஜன-202203:24:21 IST Report Abuse
வெகுளி இது போன்ற நடவடிக்கைகள் மத்திய அரசு என்ற மரியாதை இல்லாமல் கூவும் கூலிபான்கள் மீதும் தேவை....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஜன-202215:56:03 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் ஆனால் ஒரு அரசே மற்றொரு அரசை மற்றும் ஒன்றிய அரசை இவ்வளவு என்று இல்லாமல் அவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்து தினம் தினம் ஊடகங்களின் வாயிலாக செய்தி ஒளிபரப்பிவருவதற்கு ? ஒவ்வொரு நிமிடமும் எந்த செய்தியை திருப்பினாலும் இந்தியாவின் மன்னிக்கவும் ஒன்றிய அரசை ஏதாவது ஒருவகையில் தலைமுதல் வால்வரை ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் எல்லாவற்றுக்குமே தவறான செய்திகளை ... இன்றுகாலைக்கூட செய்திகளில் காணமுடிந்தது அதுவும் மக்கள் பிரநிதி, . இந்த பூஜைகளுக்கு யார் மணி கட்டப்போகிறார்கள், தான் வாழ நாட்டைக் கெடுக்கும் நிலைமாறினால் மக்கள் மனம் திசை மாறாமல் இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
22-ஜன-202214:08:40 IST Report Abuse
Rafi உண்மைதன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கலாம் அது தான் ஜனநாயக முறை. 130 கோடி பார்வையாளர்கள் என்றால் நாட்டின் கிட்டத்தட்ட மக்கள் தொகை அளவிற்கு இருக்கே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X