அரசுக்கு எதிராக அவதுாறு பரப்பிய சமூக வலைதளங்கள் முடக்கம்| Dinamalar

அரசுக்கு எதிராக அவதுாறு பரப்பிய சமூக வலைதளங்கள் முடக்கம்

Added : ஜன 22, 2022 | கருத்துகள் (3) | |
புதுடில்லி: அரசுக்கு எதிரான பொய் செய்திகளை பரப்பிய சமூக வலைத்தளமான 'யு டியூப்'பில் 35 சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் யு டியூப்பின் சில சேனல்கள், ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டுள்ளன. இந்த சேனல்கள்

புதுடில்லி: அரசுக்கு எதிரான பொய் செய்திகளை பரப்பிய சமூக வலைத்தளமான 'யு டியூப்'பில் 35 சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் யு டியூப்பின் சில சேனல்கள், ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டுள்ளன. இந்த சேனல்கள் வாயிலாக இந்தியாவுக்கு எதிரான அவதூறான தகவல்கள் பரப்பி விடப்பட்டன. அதேபோல் இரண்டு இணையதளங்கள், 'டுவிட்டர்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' ஆகியவற்றில் தலா இரண்டு கணக்குகள், 'பேஸ்புக்'கில் ஒரு கணக்கு ஆகியவற்றை தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இதற்கான உத்தரவுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனித்தனியாக பிறப்பித்துள்ளது.சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களை இந்திய புலனாய்வு அமைப்புகள் கூர்ந்து கண்காணித்து வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X