மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் அறிவழகன், சுபஸ்ரீ மற்றும் போலீசார் கிட்டப்பா பாலம் சுடுகாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த மயிலாடுதுறை பெரிய சாலியத்தெரு அய்யர் என்பவரது மகன் ரஞ்சித் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், ரஞ்சித் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் உள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரன்கோயில் வடக்குவீதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் மகேந்திரன்(21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE