ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: கர்நாடகா உறுதி

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 22, 2022 | கருத்துகள் (4)
Advertisement
பெங்களூரு: தமிழகத்தின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் சட்ட ரீதியாக கர்நாடகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் சட்ட ரீதியாக எதிர்ப்பு தெரிவிப்போம். கிருஷ்ணா
ஒகேனக்கல், கூட்டு குடிநீர் திட்டம், கர்நாடகா, பசவராஜ்பொம்மை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: தமிழகத்தின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் சட்ட ரீதியாக கர்நாடகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் சட்ட ரீதியாக எதிர்ப்பு தெரிவிப்போம். கிருஷ்ணா மற்றும் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளேன். ஜன.,இறுதி மற்றும் பிப்., முதல் வாரத்தில் மீண்டும் ஆலோசிக்கப்படும். அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துவேன்.


latest tamil news


அதில் எடுக்கப்படும் முடிவுகள் வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எல்லை அல்லது நீர் பிரச்னை என்றால், அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக கடந்த காலங்களில் இருந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Annan - Madurai,இந்தியா
23-ஜன-202205:16:50 IST Report Abuse
Annan காவிரி தண்ணீர் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகத்திற்கு செல்லவில்லை. அதனால் தமிழக பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களினால் கர்நாடகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத போது எந்த அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கிறது. கர்நாடகத்திடம் தமிழகத்திற்கு வர வேண்டிய நீரின் பங்கு உள்ளதால் அதன் புதிய அணைத்திட்டங்களுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. கர்நாடகாவில் கபினி அணை கட்டிய பின் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு பாதியாக குறைந்து விட்டது. 40 ஆண்டுகளில் கர்நாடகா பாசனபரப்பை பல இலட்சம் ஏக்கர்களுக்கு மேல் விரிவு படுத்திவிட்டது. தமிழகத்தில் தஞ்சாவூர் பகுதியில் பல இலட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு குறைந்துவிட்டது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தாலும் உரிய நேரத்தில் தமிழகத்தின் பங்கை தருவதில்லை. அணை நிரம்பி வழிந்தோடும் போது மட்டுமே உபரி நீரை தமிழகத்திற்கு தருகிறது. தற்போது அந்த உபரி நீரையும் தமிழகத்தற்குள் நுழைவதற்கு முன் தடுத்து பயன்படுத்திக் கொள்ள மேகதாது அணையை கட்ட திட்டமிட்டுள்ளது. உபரி நீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்க தமிழகத்தில் தடுப்பணைகள் (கட்ட வழி) இல்லாததால் மற்ற நதிகளுக்கு திருப்பிவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையே காரணமாக வைத்து உபரி நீரை பங்கு நீராக கணக்கு காண்பிக்கும் கர்நாடகம் ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக தானே தடுப்பு அணையை கட்டுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கறது. தமிழகத்திற்குள் வந்த காவிரி தண்ணீரில் கர்நாடகத்திற்கு பங்கோ உரிமையோ இல்லாத போது தமிழகத்தின் திட்டங்களுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நியாயமோ உரிமையோ இல்லை.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
23-ஜன-202204:49:35 IST Report Abuse
rajan ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தமிழ்நாட்டிற்கு ஒன்று என்றால் ஓடோடி வருவேன் என்றவர் எங்கே தமிழக பிஜேபி தமிழ்நாட்டு மக்களுக்காக கர்நாடக சென்று எதிர்ப்பு போராட்டம் நடத்துமா அதற்கான தைரியம் உண்டா கர்நாடகாவில் உயர்பதவி வகித்த போலீஸ் அதிகாரி அங்கு சென்று எதிர்ப்பு தெரிவிக்க முதுகெலும்பு உள்ளவரா ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தமிழக பிஜேபியின் நிலை என்ன
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-ஜன-202218:14:55 IST Report Abuse
A.George Alphonse இவர்களுக்கு தமிழ் நாட்டுக்கு சம்மத்தப்பட்ட எல்லா விஷயங்களையும் எதிப்பதே வழக்கம்.அங்கு எந்த கட்சி ஆட்சி செய்தாலும் எதிர்ப்பதே பழக்கம்.அப்போது எல்லாக்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக எதிர்ப்பார்கள்.ஆனால் நாம் மட்டும் எதிலேயும் ஒற்றுமை இல்லாமல் எட்டப்பன்களாக இருக்கிறோம்.அத னால் தான் நாம் அண்டை மாநிலங்களு க்கு தொக்காகி போனோம்.இனிமேலா வது நமதுமாநிலம் செழிக்க ஒற்றுமை யாய் செயல் படுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X